பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாடகமேடை நினைவுகள் வசனத்திற்கு ஒத்திகை மேற்கூறிய அளவுதான்; ஆயினும் பாட்டுகளுக்கு மாத்திரம் ஒத்திகை நடத்திவந்தார்கள் இன் னின் ன் காட்சியில் இன்னின் ன பாட்டுகள் பாடவேண்டுமென்று கோவிந்த சாமிராவ் தீர்மானிப்பார். சில சந்தர்ப்பங்களில் பொ துவாயிருக்கப்பட்ட, வசக் கருதுவின் வர்ணனை, தோட்ட சிருங் காசம், விரகதாபம், மன் மதது.ாஷன, முதலிய இடங்களிலெல் லாம் பழயப்பாட்டுகளை உபயோகிப்பார்கள். மற்ற இடங்களில் தானே, புதிய பாட்டுகள் வர்ண மெட்டுகளுடன் அமைத்துக் கொடுப்பார். இப்பாட்டுகளை மாத்திரம், வேஷதாரிகள் பக்க வாத்தியக்காரர்களுடன் ஒத்திகையில் பழகி வருவார்கள். இனி அன்றிரவு நான் கண்ட டர்களை ப்பற்றி சிறிது விஸ் தாமாகக்கூற விரும்புகிறேன். முதலில் அக்கம்பெனியை ஸ்தாபித்தவரும் கம்பெனியின் தலைவருமாயிருந்த கோவிந்த சாமிராவை எடுத்துக்கொள்ளுகிறேன். இவரை இறக்துபட்ட தமிழ்நாடகங்களை மறுபடியும் உயிர்ப்பித்தவர்களுள் முதன்மை யானவராய்க்கொள்ள வேண்டும். இவர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி, மஹாராஷ்டிரம், முதலிய பல பாஷைகளில் வல்லவர். அப்பாஷைகளிலெல்லாம் நன்ருய்ப் பேசக் கூடிய சாமார்த்தியம் வாய்ந்தவர். இவர் முதலில் கவர்ன் மென்ட் உத்தியோகத்தில் இருந்தவர், சுமார் நூறு ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண் டிருந்தனராம். (அக்காலத்தில் நூறு ரூபாய் என்பது தற்காலத்தில் முன்னுாறு ரூபாய் வரும்படிக்குச் ச்மான மெனலாம்.) பூணு தேசத்திலிருந்து, சாங்கிலிகம்பெனி யென்று பெயர் கொண்ட மஹாராஷ்டிர நாடகக் கம்பெனி யொன்று இதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாக, கஞ்சாவூ, ருக்கு வந்ததாம்; அக்கம்பெனியின் நாடகங்களைப் பார்த்து, நாடகமாடுவதில் மிகுந்த விருப்ப முடையவராய், அதைப் போன்ற தமிழ்நாடகக் கம்பெனி பொன்று ஸ்தாபிக்க வேண்டு மெனத் தீர்மானித்து தஞ்சாவூரிலும் சுற்றுப்பக்கத்திலுமுள்ள தனக்குத் தெரிந்த நாடக மாடுவதில் விருப்ப முடையவர்களும், சங்கீதப் பயிற்சி யுடையவர்களுமான சில சிறுவர்களைத் தனக் குத் துணையாகக்கொண்டு, மேற்சொன்ன மனமோஹன நாடக கம்பெனி' என்பதை உண்டு பண்ணினர். உடனே, இதற்காகத் தனது காலமெல்லாம் செலவழிக்க வேண்டுமென்று கருதின வாாய் தானிருந்த கவர்ன்மெண்ட் உத்தியோகத்தை ராஜீனும்ா கொடுத்துவிட்டார் நாடகமாடவேண்டு மென்று அவருக்கு அவ்வளவு ஊக்கம் இருந்தது போலும் பிறகு தன் கம்பெனி யைச் சேர்ந்த சிறுவர்களுக்கெல்லாம் தமிழ் பாஷையில் சில நாடகங்களைக் கற்பித்து, ஏற்கன்வே சங்கீதப் பயிற்சி உடைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/29&oldid=727437" இலிருந்து மீள்விக்கப்பட்டது