பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 93 எங்கள் சபையாான்றி இக்காடகத்தை முதல் முதல் நடித் தது, எனக்கு ஞாபகம் இருக்கும்வரை, கோவிர்தசாமி ராவின் மனமோகன நாடகக் கம்பெனி யாரே. அவர்கள் சென்னே யில் இந்த நாடகத்தை நடித்தபொழுது, என் உத்திரவைப் பெற்றே நடித்தார்கள். கோவிந்தசாமிராவ் என்னே வரும்படி நேராக வழைத்தார். முதல் முதல் நான் எழுதிய நாடகத்தை மற்றவர்கள் நடிக்கக் கண்டது. இதுதான். அது வரையில் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் நானே நடித்துக்கொண்டிருந்த படியால், இம்மாதிரியான சந்தர்ப்பம் எனக்குவாய்க்காமற்போ யிற்று. அக்கம்பெனியில் சிறக்க பாடகராயிருந்த சுந்தாராவ் என்பவர் சுலோசனையாக நடித்தார். குப்பண்ணான் என்பவர் லீலாவதியாக நடித்தார். இதில் ஒரு விசேஷம் நாடக தோர ணேயை நோக்குமிடத்து, லீலாவதியே கதாநாயகி என்று ஒரு விதத்தில் சொல்லவேண்டும் அன்றியும் சுலோசன பாத்திாக் தைவிட லீலாவதி பாத்திரத்தை ஆடுதல் மிகவும் கடினம் என் பதற்குக் கொஞ்சமேலும் சந்தேகமில்லை. அப்படி யிருந்தும், ஏறக்குறைய எல்லாக் கம்பெனிகளிலும், "அயன் ஸ் கிரீ பார்ட்” என்று சொல்லப்படும் முக்கியமான ஸ்திரீ வேஷம் தரிப்பவரே, சுலோசன பாத்திராக நடிப்பது வழக்கமாய் விட்டது. கதாநா யகன் மனைவி கதாநாயகி என்று தீர்மானித் து விடுகிரு.ர்கள். இது பெரும்பாலும் வாஸ்த மாக இருந்தபோதிலும், அப்படி யிருக்க வேண்டிய அவசியமில்லை. இதை ஷேக்ஸ்பியர் நாடகங் களைக் கற்கும் என் இளைய நண்பர்கள் நன்கு அறிவார்கள். இதில் இன்னுெரு வேடிக்கை. சுந்தரராவ் என்பவர் கொஞ் சம் ஸ்துால சரீரமுடையவர், குப்பண்ணாவ் மெல்லிய சரிச முடையவர், இருந்தும் கு.பண்ணாவ் மூத்தவளாகவும் சுந்தா ராவ் இளையவளாகவும், நடித்தார்கள். சில குடும்பங்களில் மூத்த பெண்ணை விட இளைய பெண் பெரிய உடம்பை உடைத்தாயிருப் பதை நான் அறிந்திருக்கிறேன். இருந்தும், கூடுமானுல் இதைத் தவிர்த்திருத்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. அன்றைத் தினம் நடித்ததில் சுங் காசாவ் பாடல் கான் முன்பே குறித்தபடி மிகவும் நன்முயிருந்தது; ஆயினும் கேவலம் வசனத்தை மாத்தி சம் கருதுங்கால் குப்பண்ணராவ் கடித்ததே சிலாசிக்கத்தக்கதா யிருந்தது. நான் பார்த்த அநேகம் லீலாவதிகளுக்குள், ஜீவனத் துக்காக நடிக்கும் கடர்களுக்குள் இவரே சிறந்தவரென்று நான் சொல்லவேண்டும். ஜீவனத்துக்காக நடிக்கும் பிரபல நடிகர்கள் சாதாரணமாக அநேக காசனங்கள் பற்றி கெடு நாள் ஜீவித்திருப் பதில்லே. இதற்கு விரோதமாக இந்தக் குப்பண்ணாவ் அநேக வருஷங்கள் ஜீவி த்திருத்தார். கடைசியாக, சில வருஷங்களுக்கு முன், அவருக்கு வயது அதிகமான போதிலும், இக்த லீலாவதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/98&oldid=727513" இலிருந்து மீள்விக்கப்பட்டது