பக்கம்:Siva Temple Architecture etc..pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கூறலாம். இவைகளெல்லாம் 18-ஆம் நூற்றாண்டிற்குப் பின்பட்டுதான் கட்டப்பட்டவை.

திராவிட சில்பம்

இனி திராவிட சில்பத்தைப்பற்றி ஆராய்வோம். திராவிட சில்பமென்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் ஜாதியார்களாகிய திராவிடர்களுடைய சில்பமாகும். இந்த சில்பமானது ஏறக்குறைய தென் இந்தியாவில் - அதாவது விந்திய பர்வதத்திற்கு தெற்கிலுள்ள பிரதேசத்தில்-வழங்கப்பட்டதாகும். திராவிட சில்பம் தென் இந்தியாவில் சுயமாய் ஏற்பட்டது என்று சிலர் எண்ணுகிறார்கள். கருங்கல்லாலாகிய திராவிட சில்பம் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து கற்றது என்று சிலர் கூறுகின்றனர்; இதற்கு அத்தாட்சியாக எகிப்தில் தீப்ஸ் நகரத்தில் ஆமான் (Aman) கோயிலுக்கும், இந்தியாவில் பம்பாய்க்கடுத்த கோயில்களில் பல தூண்கள் அமைந்த மண்டபங்களுக்கும், திராவிட கோயில்களிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கும், ஒற்றுமை யிருப்பதைக் காட்டுகின்றனர். அன்றியும் எகிப்தில் பைலே (Philae) என்னும் நகரத்திலுள்ள கோயிலிலுள்ள தூண்கள் இந்தியாவில் பம்பாய்க் டுத்த யானைக்குகைக் கோயிலிலும், எல்லோரா கோயில்களிலுமுள்ள தூண்களைப்போலவே இருப்பது எடுத்து காட்டப்படுகிறது. எகிப்து தேசத்திலுள்ள ஆபிலிஸ்க் (Obelisk) லிங்க்வடிவாயிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. மாமல்லபுரத்து கடற்கரைக் கோவிலிலுள்ள சிகரத்தைப்போல், எகிப்து தேசத்தில் சில இருப்பதும் ஆராயத்தக்கது. இந்த ஆராய்ச்சியில், கிப்பன் (Gibbon) எனும் உலக பிரசித்திபெற்ற சரித்திரக்காரர், எகிப்து தேசத்திற்கும் தென் இந்தியா மலையாள தேசத்திற்கும், இலங்கைத் தீவிற்கும், ஆதிகாலத்தில் போக்குவரத்து இருந்ததாகக் கூறியது கவனிக்கத்தக்கது

இராமாயண இதிகாச காலத்தில் தென்னிந்தியாவைச் சார்ந்த விடங்களில் கோயில்களும், கோபுரங்களும் இருந்தனவென்று நாம் கூறலாம். கோபிநாதராயர் அவர்களும் இப்படியே எண்ணுகிறார். அவைகளெல்லாம் மரத்தாலானவை என்றும் ஊகிக்கலாம் (ஆகவே ஹநுமான் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/10&oldid=1294653" இலிருந்து மீள்விக்கப்பட்டது