பக்கம்:Siva Temple Architecture etc..pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பட்டவைகளாம். இவைகள், பெரும்பாலும், ஒன்றிற்கு மேற்பட்ட, கூரைகள் உடையவை கூரைகள் வெளியே நீட்டப்பட்டவைகளாயிருக்கின்றன. சுவர்கள் மரத்தாலமைக்கப் பட்டிருக்கின்றன ; அல்லது சுவர்கள் இருக்க வேண்டிய இடங்களில், மரத்தாலாய வேலிகள் போன்ற அடைப்புகள் அமைந்திருக்கின்றன. பௌத்த ஸ்தூபங்களுக்குப் பாதுகாப்பாக, ஆதியில் மரத்தால் செய்யப்பட்டு, பிறகு கருங்கற்களால் அமைக்கப்பட்ட சான்சி (Sanchi) முதலிய இடங்களிலிருக்கும் ரெய்லிங்ஸ் (Railings) என்பவைகளைப்போல் இவைகள் இருக்கின்றன. மலையாள தேசமானது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில், மலைகளால் சூழப்பட்டிருந்தமையால், மற்ற நாடுகளுடன் அதிக போக்குவரத்தின்றி பூர்வீக நாகரிகமானது அப்படியே வளர்ந்துவர இடங்கொடுத்ததென்று கூறுவதற்கு, பல ஆதாரங்கள் உண்டு. ஆகவே அங்குள்ள சில கோயில்கள் பூர்வகாலத்தி லிருந்தபடியே, புதுப்பிக்கப்பட்டு வந்தன என்று நாம் எண்ணக் கூடும்.

ஆதியில் செங்கல் கட்டிடங்களாயிருந்த பல கோயில்கள், கருங்கற்கட்டிடங்களாக மாற்றப்பட்டன வென்பதற்கு நமக்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. இதற்கு உதாரணமாக தஞ்சை ஜில்லாவிலுள்ள மேலப்பழுவூர் ஆலயத்தையும், திருக்கோடிக்காவல் ஆலயத்தையும் கூறலாம்.

கருங்கற்களால் கட்டிடங்களை நிர்மாணிப்பது, எகிப்து, கிரிஸ் (Egypt, Greece) முதலிய தேசங்களினின்றும், வட இந்தியாவிற்கு வந்து, பிறகு குப்த, (Gupta) சளுக்கிய (Chalkya) அரசர்களால், வர்தாபி (Vatapi) முதலிய இடங்களில் பரவி, அதன்பின் சென்னை ராஜதானியின் தெற்குபாகத்தில், பல்லவ அரசர்களால், விஸ்தரிக்கப்பட்ட தென்று கூறலாம். திராவிட கருங்கற் சில்பக் கோயில்கள், தமிழகத்தில் பரவியதற்கு, இதுதான் காரணம் என்று. இதை ஆராய்ந்த பல சாஸ்திரீகர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

சிவாலய அமைப்பு

இந்துக்களுடைய ஆலயங்களின் முக்கிய பாகம் கர்ப்பக்கிரஹமாம்; பெயருக்கேற்ற்படி. இதன் மத்தியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/12&oldid=1397651" இலிருந்து மீள்விக்கப்பட்டது