பக்கம்:Siva Temple Architecture etc..pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ரோஹனம் என்னும் கிரியைகள் நடப்பதைக் கவனிக்கவும். சில கோயில்களில் இந்த துவஜஸ்தம்பத்திற்கு அருகில் அல்லது அது இருக்கவேண்டிய இடத்தில், தீபஸ்தம்பங்கள் இருப்பதைக் காணலாம். இது ஜைன ஆலய வழக்கக்தின் முறையை அனுசரித்த வழக்கம் என்று எண்ணப்படுகிறது.

பழய ஆலயங்களிலெல்லாம் ஒரே மதில் சுவர்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே ஒரே பிராகாரம்தானிருந்தது. பிறகு பல பிராகாரங்கள் சேர்க்கப்பட்டன. அன்றியும் பிராகார வாயில்களில் பெரிய கோபுரங்கள் கட்ட ஆரம்பித்தார்கள். இக் கோபுரங்கள், பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட மாமல்ல புரத்திலுள்ள (மாபலிபுரம்) பீமன் ரதம் என்று வழங்கப்படுகிற கோயிலின் ஆகாரத்திலிருந்து உண்டானவைகள் என்று பெர்கூசன் துரை அபிப்பிராயப்படுகிறார். இந்த பீமன் ரதத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், மற்ற விமானங்கள் ஏறக் குறைய சதுரமாயிருப்பது போலல்லாமல், இது நிகளத்தில் அதிகமானது ; இது 48 அடி நிகளம் 25 அடி அகலமுடையது. இப்படிப்பட்ட கட்டிடங்களின்மீது ஒன்றின்மீதொன்று அடுக்கிக் கட்டினால் தற்கால கோபுரமாகிறது. கோபுரங்களின் அடுக்குகளுக்கு நிலைகள் என்று பெயர். பிற்காலத்தில் கட்டப்பட்ட பல கோபுரங்கள் 9 அல்லது 11 நிலைகளை உடையனவாயிருக்கின்றன. எல்லாக் கோபுரங்களிலும் நிலைகள் சிற்ப சாஸ்திரப்படி, 1, 3, 5 முதலிய ஒற்றைப்படையா யிருக்கவேண்டும். இக்கோபுரங்களுக்கு மேல், கோபுரத்தில் எத்தனை நிலைகள் இருக்கின்றனவோ, அத்தனை ஸ்தூபிக் கலசங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். கோபுரம் 11 நிலையுடையதா யிருந்தால் 11 கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும், 5 நிலை யுடையதாயிருந்தால் 5 கலசங்கள் உடையதாயிருக்கும். மற்றவைகளுக்கும் இப்படியே இருக்கவேண்டும்.

பிற்காலத்தில் நமது ஆலயங்களில் பிராகாரங்களில் பல மண்டபங்கள் சேர்க்கப்பட்டன். சிற்ப சாஸ்திரங்களின்படி ஏறக்குறைய 108 மண்டபங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன ; இவைகளின் பெயர்களையெல்லாம் இங்கு குறிப்பதற்கு இடமில்லை. இவற்றுள் சில நூற்றுக்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/14&oldid=1293846" இலிருந்து மீள்விக்கப்பட்டது