பக்கம்:Siva Temple Architecture etc..pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

மண்டபம் ஆயிரக்கால் மண்டபம் என்பதை மாத்திரம் குறிக்கிறேன்.

கடைசியாக, உற்சவ மூர்த்திகள், அமைக்கப்பட்ட பிறகு, பெரிய கோபுரங்களுக்கெதிரில், நான்கு அல்லது பதினாறுகால் மண்டபங்கள் கட்டப்பட்டன. பதினாறுகால் மண்டபத்தருகில் ரதோற்சவ காலத்தில் ஸ்வாமி ரதத்தில் ஆரோஹிணப்பதற்காக தேர்முட்டிகள் என்று சொல்லப் பட்ட தேர் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

ஆதிகாலத்திலேயே ஒவ்வொரு கோயிலுக்கும் எதிரில் பெரிய குளம் வெட்டப்பட்டது. சில பெரிய கோயில்களில் உள்ளேயும் குளங்கள் வெட்டப்பட்டன. இவைகள் பக்தர்கள் கோயிலுக்குள் போகுமுன் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு போகவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதற்குச் சந்தேகமில்லை. திராவிட கோயில் சில்ப விதிப்படி இக்குளங்கள் முக்கியமான அம்சங்களாகும்.

நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்றொரு விஷயம் என்னவென்றால், சிவாலயங்களில் அம்மனுக்குப் பிரத்தியேகமான கோயில் கட்டப்பட்டது பிற்காலத்தில் என்பதேயாம் ; பல்லவ சில்ப கோயில்களில் அம்மன் அல்லது தேவிக்கு வேறு கர்ப்பக்கிரஹகம் கிடையாது ; தற்காலம் அம்மனுக்கு கோயிலில்லாத சிவாலயமே கிடையாதென்று கூறலாம். இவைகளெல்லாம் பிற்காலத்தில் கட்டப்பட்டவை. மிகவும் பூர்வீக சிவாலயங்களில், கணநாதருக்கும், சுப்பிரமணியருக்கும் பிரத்தியேகமான சங்நிதிகள் கிடையா; அவைகளெல்லாம் பிற்காலத்தில் கட்டப்பட்டவை. இச்சந்தர்ப்பத்தில் பூர்வீக திராவிடர்களுக்கு லிங்க பூஜைதான் பிரதானமாயிருந்தது; பிறகுதான் சக்தி அல்லது தேவி அல்லது அம்மன் பூஜை அதனுடன் சேர்க்கப்பட்டது, என்பது கவனிக்கத்தக்கது.

மிகவும் புராதனமான பல்லவக்குகைக் கோயில்களிலும், கட்டிடக் கோயில்களிலும், கர்ப்பக் கிரஹத்தின் உட்புறச் சுவரில் சோமாஸ்கந்த மூர்த்தி செதுக்கப்பட்டிருந்தது; லிங்கமானது அதற்குமுன் வைக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு முன்பு கூறியபடி பிரத்யேகமான அறை கிடையாது ; இதற்கு உதாரணமாக மாபலிபுரத்திலிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/15&oldid=1293852" இலிருந்து மீள்விக்கப்பட்டது