பக்கம்:Siva Temple Architecture etc..pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

சில்ப மென்றே கூறுவோம். இச்சில்பமமைந்த கோயில்கள், வட இந்தியாவில், சிந்து, கூர்ஜரம், ராஜஸ்தான் அயோத்யை, ஐக்கிய மாகாணங்கள், வங்காளம், ஒரிஸ்ஸா முதலிய இடங்க்ளில் இருக்கின்றன; மொத்தத்தில் விந்திய பர்வதத்திற்கு வடக்கேயுள்ள கோயில்களெல்லாம் ஆரிய சில்ப முடையவை. இந்த ஆரிய சில்பத்துக்கோயில்களின் முக்கிய அம்சங்கள் அடியில் வருமாறாகும் :-

(1) இக்கோயில்களின் முக்கிய அம்சம் விமானமேயாகும் (2) இவைகளில் கோபுரங்கள் கிடையா (3) விமானங்களில் திராவிட கோயில்களில் இருப்பதுபோல் நிலைகள் அல்லது மாடிகள் கிடையா (4) சதுர வடிவாயுள்ள கர்ப்ப கிரகத்தின் மீது கட்டப்பட்ட (Spires) வளைந்த ரேகைகளையுடைய கும்பட்டங்கள் போன்ற உருவை உள்ளனவாயிருக்கும். (Curvilinear) (5) விமானங்கள் வட்ட வடிவமானவை (6) விமானங்கள் நான்கு பக்கங்களிலும் உச்சியினின்றும் கீழே இறங்கும் நான்கு பட்டைகளையுடையவை, (7) சிகரமானது சிறிது நடுவில் அழுத்தப்பட்ட நெல்லிக்கனியைப் போலிருக்கும். இதற்கு முக்கிய உதாரணமாக, வட இந்தியாவிலுள்ள சிற்றூர், நாசிக், காசி, உதயபுரி ஈஸ்வர கோயில்களைக் கூறலாம். இப்படிப்பட்ட விமானங்கள் பௌத்த ஸ்தூபங்களின்றும் பிறந்தவை என்று எண்ணப்படுகிறது. ஸ்தூபங்கள், உள்ளே குடையப்பட்ட அறைகளாக மாறி, சதுரமான பீடங்களின்மேற்கட்டப்பட்டு, மேலே நீண்ட கும்மட்டங்கள் போன்ற சிகரங்களை யுடையவைகளாயின, என்று ஆக்ஸ் போர்டு (Oxford) சம்ஸ்கிருத பேராசிரியர் அ. அ. மெர்டானல் என்பவர் அபிப்பிராயப் படுகிறார்.

ஒரிஸ்ஸா சில்பம்

இது ஆரிய சில்பத்தின் பகுதியாகும்; இதன் முக்கியமான அம்சம் என்னவென்றால் இச்சில்பக் கட்டிடங்களில் தூண்களே கிடையாது என்னலாம். இதற்கு உதாரணமாக புவனேஸ்வரில் உள்ள பல ஆலயங்களைக் கூறலாம்; இதனை வேசர சில்பம் என்று சிலர் அழைக்கின்றனர்.

காஷ்மீர் சில்பம்

இது அப்பெயர் குறிக்கிறபடி காஷ்மீர் தேசத்திலுள்ள சில கோயில் சில்பத்தைக் குறிக்கிறது. இச் சில்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/8&oldid=1288805" இலிருந்து மீள்விக்கப்பட்டது