பக்கம்:Siva Temple Architecture etc..pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

கள் இந்தியாவுக்குள் பிரவேசித்தது சுமார் நாலாயிரம் வருடங்களுக்குப் பிறகுதான் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே ஆரிய சில்பம் என்னப்பட்டது அதற்குப் பிறகு தான் நமது தேசத்தில் தோன்றியிருக்க வேண்டும். திராவிடர்கள் இந்தியாவில் அதற்கு முன்பே யிருந்த ஜனங்களாவார்கள். இன்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்பே திராவிட நாகரீகமானது நமது தேசத்தில் பரவி யிருந்ததென எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. சர்ஜான்மார்ஷல் முதலிய் சாஸ்திரீகர்கள், மோஹஞ்சதரோ, ஹராப்பா முதலிய இடங்களில் பூமி மட்டத்திற் கீழ் தோண்டி, அங்கு அகப்பட்ட பல மிகவும் புராதனமான கட்டிடங்களை வெளிப்படுத்தி யிருக்கின்றனர். இவர்கள் இக்கட்டிடங்களெல்லாம் திராவிடக் கட்டிடங்களே என்றும் கூறியிருக்கின்றனர். ஆகவே திராவிட சில்பம் நமது தேசத்தில் மிகவும் புராதனமானது என்று கூறலாம்.

மேற்சொன்ன, வட இந்தியாவிலுள்ள சிந்து நதிக் கரைக்கடுத்த இரண்டு ஊர்களில் தோண்டி எடுக்கப்பட்ட கட்டிடங்களில் சிவலிங்கங்கள் அகப்பட்டிருக்கின்றன. ஒரு லிங்கமானது அதன் பீடத்துடன் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் மற்ற இடங்களிலும் தோண்டிப் பார்த்தால் இன்னும் பல கிடைக்கலாம் என்று எண்ண இட முண்டு. இவ்விஷயத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய தென்னவென்றால், லிங்க பூஜை புராதனமான திராவிடர்களுக்குரியதாம் என்பதே. ஆகவே நமது தேசத்தில் சிவாலயங்களே மிகவும் முற்பட்டவை என்று கூறலாம். ஆகவே இதுவரையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி இந்தியாவில் மிகவும் புராதனமான ஆலயம் திராவிட சில்பமமைந்த சிவாலயம் எனக் கூறலாம்.

ஆரிய சில்பம்

இனி வட இந்தியாவிலுள்ள ஆரிய கோயில் சில்பத்தைப்பற்றி சிறிது ஆராய்வோம். இது இந்திய ஆரிய சில்பம் என்றும் அழைக்கப்படுகிறது. சிலர் இதற்கு வேசர சில்பம் என்று பெயரிட்டிருக்கின்றனர். இன்னும் சிலர், வேசர சில்பம் ஆரிய சிலபத்தின் பகுதி என்று கூறுகின்றனர்; இதை இச்சிறு நூலில் இனி ஆரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/7&oldid=1294652" இலிருந்து மீள்விக்கப்பட்டது