பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 365 தேர்ந்து முடிவில் தலைவியிடம் அவனைக் கூட்டுவிப்பாள். தலைவி யின் களவு நெறியில் அளவுடன் குறியிடங்களை ஏற்படுத்தித் தலைவன் தலைவியைச் சந்திக்கும் வாய்ப்புகளைத் தருவாள். இவளின்றி தலைவன் தலைவி இவரிடையேயும் சந்திப்பே இருத் தல் இயலாது. இத்தகைய சந்திப்புகளை இயன்றவரை குறைத்து விரைவில் வரைந்து கொள்ளுமாறு நயமாக வற்புறுத் தும் தோழியின் பண்பினை அகப்பாடல்களில் கண்டு நுகர வேண் டிய அருமைப் பாடாகும். தலைவனுடைய பிரிவுகளின் பொருத் தங்களை ஆய்ந்து ஒப்பித் தலைவியும் ஒப்புமாறு வற்புறுத்தும் பண்புடையவள். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியைப் பல்லாற்றானும் தேற்றுபவள். ஒரோ வழித் தலைவன்பாற் குறைகள் காணின், கழறியுரைத்து அவனையும் திருத்துபவள். நற்றாய் செவிலித்தாயர்க்குத் தலைவன் தலைவியர் கூட்டுறவு களைத் திறம்பெற உரைத்து-சிறந்த முறையில் அறத்தொடு நின்று-உடன்பாடு பெறும் சீலம் உடையவள். களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோள்களினும் இத்தோழியின் தொடர்பு இல்லாத இடன் இல்லை என்று கூறத் தக்க முதன்மை வாய்ந்தவள். தோழி தானே செவிலி மகளே’ என்ற தொல்காப்பிய விதிப்படி செவிலியின் மகளாகக் கருதப் பெறும் இவளுடைய சதுரப்பாடமைந்த பேச்சுகள் அகப்பாடல் களின் சுவையை மிகுதிப்படுத்துவனவாக இருக்கும். இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்ட தோழியின் பங்கினைத் தொல்காப்பியர் திறம்படக் காட்டுவர். தலைவியின் களவு நெறியில் முப்பத்திரண்டு கிளவிகளையும், அவளது கற்பு நெறியில் இருபது கிளவிகளையும் ' தொகுத்துக் கூறுவர். அவற்றை விளக்கும் முறையில் உரையாசிரியர்கள் காட்டும் பாடல்கள் அவளது பெரும் பங்கினை மேலும் நமக்குத் தெளி வுறுத்தும். இப்பகுதிகளை நுணுகி ஆராயின், மக்கள் மன நிலையை அவர்தம் தோற்றம் ஒழுக்கம் முதலியவற்றால் உய்த் துணரும் மனப் பயிற்சியும் ஒத்த அன்பினராகிய தலைவனையும் தலைவியையும் உலகியல் கூறித் தீதொlஇ நன்றின்பால் உய்க்கும் 77. களவியல்-35 (இளம்) 78. டிெ-, 24. 4. 79. டிெ கற்பிறல்-, 9.