பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 அகத்திணைக் கொள்கைகள் அருந்துய ருடையள் அவளென விரும்பிப் பாணன் வந்தனன் துதே நீயும் புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி நெடுந்தேர் ஊர்மதி வலவ! முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே.* (வண்டு இனம்-வண்டுக் கூட்டம்; தவிர்க்கும்-தடுக்கும்; தண்பதக் காலை-குளிர்ந்த கார்காலத்தில்; ஆண்டு-அவர் சென்ற இடம்; பல்இதழ்-பல இதழ்கள்; அரும்துயர்பொறுத்தற்கரிய துயரினை; முன்னிய-எண்ணி முயன்ற; புல்ஆர்-புல்வினைத் தின்ற; புரவி-குதிரை: முடிந்தன்று . முடிவுற்றது; ஊர்மதி-செலுத்துவாயாக-வினை; செயல்.) இதில் தலைவன் தன் பாகனை நோக்கிப் பேசுகின்றான்: தோழியே, நமது தலைவர் வத்தாலும் சரி, வாராதொழியினும் சரி, அவர் சென்ற இடம் அவருக்கு இனியதுபோலும் என்று தன் தோழியிடம் கூறிக்கொண்டு தாமரை மலர்போன்ற தன் கண்ணின் உள்ளிடம் எல்லாம் சிவந்து காணும்படி பொறுத்தற் கரிய துயரினையுடையவளாக இருக்கின்றாள் நின் தலைவி என்று கூறிய வண்ணம் தலைவியிடமிருந்து பாணன் துரது வந்த செய்தியைத் தலைவன் தன்பாகனுக்கு உரைக்கின்றான். தான் வந்த வேலை முடிந்ததால் தேரினைப் பூட்டி விரைந்து கடவுமாறு அவனுக்குப் பணிக்கின்றான். இங்ஙனம் தலைவியிடமிருந்து பர்ணன் தூது வந்த நிகழ்ச்சியை ஐங்குறு நூற்றின் பாடலொன்றி லும் காண்கின்றோம்." ஐங்குறு நூற்று இன்னொரு பாடலால் பாணனின் உயர்ந்த பண்பாட்டையும் அவன் தலைவனைத் மருட்டித் தெருட்டும் முறையால் அவன் தலைவிபால் கொண்டுள்ள பேரன்பையும் உரிமையையும் காண்கின்றோம். p நினக்கியாம் பாணரும் அல்லேம்: எமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ: நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டும் அருளா தோயே." 27. டிெ-244 26. ஐங்குறு-479. 28. டிெ-480