பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாடல்கள் 421 வாகக் கூறுதல். உலக வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்துவருவது. பாடல் சான்ற புலனெறி வழக்காவது, இவ்விரு வகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுவாயாகக் கூறப்படுகின்ற அகப்பொருள்' என்பது. இதனால் அளவு, கற்பு நிலைகள் தமிழரிடையே தொன்று தொட்டு வழங்கிய உலகியல் வழக்கங்களேயாகும் என்பதும், இவையே பின்னர் புலவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்றும், இலக்கணம் கற் பிக்கப்பெற்றும் செய்யுள் வழக்கு அடைந்தன என்பதும் பெறப் படுகின்றன. இதற்கும் ஆசிரியர், உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே." என்றும், அறக்கழி வுடையன பொருட்பயன் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப." என்றும் விதிகள் செய்வர். எனவே, பழந்தமிழ் நூல்கள் யாவும் &_Ꮆbé வழக்கைத் தழுவிச் செய்யப் பெற்றவையே "யாகும் என்பது ஈண்டு அறியத் தக்கது. நச்சினார்க்கினியரும், இஃது (செய்யுள் வழக்கு) இல்லதெனப்படாது, உலகியலேயாம், உலகியலின்றேல், ஆகாயப் பூ நாறிற்று' என்றவழி அது சூடக் கருதுவதுமின்றி மயங்கக் கூறினானென்று உல்கம் இழித்திடப் பெறுதலின் இதுவும் இழித்திடப்பெறும். இச்செய்யுள் வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினார், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை வகையாற் கூறும் நாடகஇலக்கணம்போல் யாதானும் ஒரோ வழி ஒருசாரார் மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமும் காலமும் நியமித்துச் செய்யுள் செய்தல் ஒப்பு நோக்கிச் செய்யப்பட்டதாகலின்' என்று கூறுதல் காண்க. மேலும் அவர், மேற்குறிப்பிட்ட நாடக வழக்கினும் என்ற நூற்பாவிற்கு உரை கூறுங்கால், 'புனைந்துரை வகையாற் கூறுப என்றலின் புலவர் இல்லனவும் கூறுபவாலோ எனின், உலகத்தோர்க்கு நன்மை பயத் தற்கு நல்லோர்க் குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி, அந் நல்லோர்க் குள்ளனவற்றில் சிறிது 4. பொருளியல் - 21 (இளம்) 5. டிெ - 22 (இளம்) 6. அகத்திணை 3 இன் உரை (நச்).