பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலமும் ஒழுக்கங்களும் 2 ஒவ்வொரு நிலத்திற்கும் இலக்கிய வழக்காக ஒழுக்கம் அமைந்ததற்குக் காரணம் என்ன? என்பதையும் ஆராய்ந்து காண்பாம். பண்டையோர் நூல்களிலேனும் அவற்றிற்கு வகுக்கப் பெற்ற உரைகளிலேனும் இதற்குரிய ஏற்புடைக் காரணம் காண்டல் அரிதாகும். அடியிற் கண்டவாறு கூறுதல் பொருந்துமா என்பது சிந்திக்கத் தக்கது. முற்காலத்து மலை நாட்டு மகளிர் இக்காலத்து மலையாள நாட்டு மகளிர் போல வளமும் எழிலும் வாய்ந்து விளங்கினர். தமிழ்த் தலைவர்கள் அன்னாரைப் பெரிதும் காமுற்று வந்தனர். களவிற்குச் சிறந்த பானாட்கங்குலில் (இடையாமத்தில்) மாவும் புள்ளும் பரந்து வழங்காது துணையுடன் மகிழ்ந்து வந்தன. மலையின் இயற்கை வளமும் காமத்தை வளர்க்கும் சூழ்நிலை யாக அமைந்தது. குறிஞ்சி நிலத்திற்குச் சிறந்த கூதிராகிய ஐப்பசி கார்த்திகைத் திங்கள்களும் (பெரும் பொழுது), இடை யாமமும் (சிறு பொழுது) இருள் துTங்கித் துளி மிகுவதால் தலைவனுக்குக் களவில் சேர்தல் அரிதாகும். இதுபற்றித் தலைவன் தலைவியர்களிடையே காமத் துடிப்பு பெருகும். எனவே, களவுக் கூட்டம் குறிஞ்சி நிலத்திற்கு வைக்கப்பெற்றது; புணர்ச்சிக்குச் சிறந்த நிலைக்களன் குறிஞ்சியாயிற்று. இங்குப் பெறும் இன்பம் பன்மடங்கு சிறக்கும் என்பது பண்டையோர் கருத்து. தலைவியுடன் கூடிய தலைவன் பிரிந்து செல்லும் இடம் 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து-நல்லியல் பிழந்த நிலமேயாதலின் பிரிதல் பாலைக்கு ஆயிற்று. பிரிந்து செல்லும் இடத்தின் இடர்ப்பாடுகளைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டுதற்கு ஏற்ற இடம் பாலை நிலமாகும். பிரிவுத்துன்பம் மிகைப்படுத்திக் காட்டப்பெறுவதற்குத் தகுந்த நிலைக்களம் இது. தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் பொழுது உறவினர் அறிந்து தடுத்தால், அவன் அவளை உடன் கொண்டு செல்வான். அவளைத் தன் ஊரில் மணந்து இல்வாழ்க்கை நடத்துவான். இங்ஙனம் பெரும்பாலும், உடன் கொண்டு செல்பவன் நாட்டுத் தலைவனே யாவான். இல்வாழ்க்கை நடத்தும் பொழுது தலைவன் பரத்தமை காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிவான். இப்பொழுது தலைவியிடம்