பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் 493 தம் வயத்ததாக்கிக் கோடல்போன்று, நீயும் நின்னலத்தின் மதுகையால் என்நெஞ்சினைக் கட்டி முற்றும் நின்னுடையதாக்கிக் கொண்டனை' என்பது. தலைவன் கூற்றில் பிறிதொரு பொருள் தோன்றியதால் இஃது இறைச்சியானவாறு காண்க. இக்கருத்து பெறப்படும் முறையினையும் விளக்குவோம்: செல்வர்.உலகி லுள்ள பொருட்செல்வம் எல்லாம் இயல்பாகவே உடையர் ஆதல் போன்று நீயும் பெண்டிர்க்குரிய நலம் எல்லாம் இயல்பாக உடையை என்பதும், பொன்புனை கயிறு காட்சிக்கினியவாதல் போன்று நின் குணமாகிய என் நெஞ்சு பிணிக்கும் கயிறு நினைத்தற்கரியது என்பதும், ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை நின் குணன் உள்ள மன்ற என்றதனால் வெப்பம் மிக்க சுரத்தின் கொடு மைக்கு நின்குணம் மருந்தாகி அதனை மாற்றி விட்டது என்பதும் துணுகி அறிந்து மகிழத் தக்கது. பாலையின் வெப்பம் நெஞ்சிற்குப் புலனாகாது அவள் பண்பே புலனாகிக் குளிர்வித்தது என்று விதந்து கூறிய தலைவனின் அருமைப்பாடு உணர்ந்து அநுபவிக்கத் தக்கது. (5) அண்மையில் திருமணம் புரிந்து கொண்ட தலைவன் ஒருவன் யாதோ ஒரு காரணத்தால் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லுகின்றான். போனவன் இன்ன பருவத்தே வருகுவன் என்று சொல்லியும் போகின்றான். அப்பருவம் வந்தும் அவன் வரவில்லை தலைவி பெரிதும் வருந்துகின்றாள். தோழி அவளைத் தேற்றி. உரைப்பதாக வரும் பாடல் இது: கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும் அற்சிரம் மறக்குநர் அல்லர்நின் நற்றோள் மருவரற் குலமரு வோரே' (கண் என கண்ணைப் போன்று: கருவிளை - கருவிளங் கொடிகள்; இவர் படர்ந்துள்ள; பீரம் - பீர்க்கு இரும் புதல் - பெரிய புதர்; அற்சிரம் - பனிபடு பருவம்; மரு வரற்கு - தழுவதற்கு உலமருவோர் - மனம் சுழன்று திரிபவர்) இந்தப் பாலைத் திணைப் பாடலில் தோழிவெளிப்படையாகக் கூறும் பொருள் இது நின் தோளை அணைவதற்குச் சிறிது இடையூறு நேர்ந்தவிடத்தும் பெரிதும் மனம் சுழன்று திரிபவர் 13. டிெ - 461