பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 513 ஐந்திணைத் தன்மை குன்றாதவாறும் முல்லைச் சமுதாயத்திற்கு ஏற்பவும் இப்பாடல்கள் அமைந்துள்ளன. ஒர் ஆயமகளுக்கும் ஆயமகனுக்கும் நடைபெற்ற பேச்சு இது: ஏடா, நீ இடையர் குடிதோறும் உள்ள மகளிரை விரும்பா நின்றாய் தேள் கடிக்கு மருந்து உடனே இட்டுத் தீர்ப்புதுபோல நின் காமவேட்கை தோன்றியபொழுதே தீர்க்க வேண்டுவ தொன்றோ? அல்லவே. விளையாட்டாக நீ என் மெய்யைத் திண்டுதற்கு யான் நின்னை அணைந்து என் மெய்யைத் தந்தேன். நான் புணர்ச்சிக்கும் எளியேன் என்று கொண்டாய். இது மோரை வேண்டினார்க்குச் சிறிது மோரை வார்த்து எளியளானவ ளொருத்தி வெண்ணெய் வேண்டினார்க்கு வெண்ணெயையும் தந்து எளியளாயிருப்பாள் என்று நினைப்பது போலல்லவா உள்ளது?’ என்று ஊடலூட்டிப் பேசுகின்றாள். "ஒண்னுதால், நீ கூட்டத்தை மறுத்தாயாயின் அக் கூட்டம் இல்லையாவதாகுக: என்னை விட்டு நீங்குக' என்று கூறியவன் பேச்சை முறித்துக் கொள்ளாது மேலும் தன் காதலைப் பலவாறு புலப்படுத்துவான். 'ஆய்ச்சாதி அருமருந்தே, மத்தைச் சுற்றிய கயிறுபோல நின்னையே சுற்றித் திரிக்கின்றது என் நெஞ்சு. நீ கூறியவற்றால் சிறிது அச்சம் உண்டாகி அதனால் நின்னை விட்டு நீங்கினாலும், தான் நிலைபெற மாட்டாது தடுமாறுகின்றது' என்கின்றது. மேலும் கூறுவான்: "முதல் சூல் கொண்ட பசு விடிந்த பொழுதும் மேயப் போகாது தொழுவத்தில் கட்டி வைத்துள்ள தன் கன்றினைச் சூழ்ந்து திரிவதைப்போல என் நெஞ்சும் நின்னையே கண்டு சுற்றித் திரிகின்றது; வருத்தத்தையும் உறுகின்றது' என்கின்றான். பின்னும் பேசுவான்: என்னிடத்து எந்நாளும் வருத்தம் மிகுகையினாலே, என் உயிர், மருந்தையிட்டு நெய்யைக் கடைந்து வாய்கின. பால் நுகர் வார்க்குச் சிறிதும் பயன்படாமல் அவர் கைச்சென்று தோய்ந்து விடும் நிலையாய் விட்டது; தான் செய்வதோர் செயலையும் அறியாது நிற்கின்றது' என்கின்றான். அ-33