பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவு பற்றிய விளக்கம் 43 - * k என்று கண்டோர் கூற்றாகக் கூறுவர். இவர் கருத்துப்படி காதலர் வெவ்வேறு இடத்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை" முன்பின் அறியாத புதியவராகல் வேண்டும் என்பதுவும் இல்லை. நாடோறும் பல்கால் பழகிவரும் இளையானும் இளையாளும் என்றோ ஒருநாள் திடீரெனக் காதல் தோன்றப் பார்த்தல் இயல்பேயாகும். பாலைநிலத்தின் உடன்போக்கில் காதலரைக் கண்டவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். இவர்கள் சிறுபருவம் தொட்டு இவர்களை அறிந்தோராதலின் பாலாற்றலை வியந்து கூறுகின்றனர். இப்பாடல் தொல் காப்பியரின் பாலதாணையின்' என்பதற்கு நல் விளக்கமாக அமைந்து கிட்த்தல் கண்டு மகிழத் தக்கது. களவு தமிழர் முறை : களவினை ஆரியரது எண்வகைப்பட்ட மணவகைகளுள் கந்தர்வத்தின்பாற்படும் என்று தொல்காப்பியர் கூறினும்,* கந்தருவம் இன்னதென்பதை, - அதிர்ப்பில்பைம் பூணாரும் ஆடவரும் தம்மில் எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப-கதிர்ப்பொன்யாழ் முந்திருவர் கண்ட முனிவறு தன்காட்சிக் கந்திருவர் கண்ட கலப்பு.’’ என்ற வெண்பாவால் கந்தர்வகுமரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டு மனமியைந்து கூடுதல் என்று நச்சினார்க்கினியர் விளக்கினாலும் தமிழர்க்கு அவ்வொழுக்கம் ஆரியரிடமிருந்து வந்த தென்பது அவர் கருத்தன்று. இஃது எல்லோரும் அறிந்த ஒன்றினைக் காட்டி அரிய கருத்தினை விளக்கினதாகும் ஒற்றுமையில் வேற்றுமை காண்டற்கே "தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளுமே ஒதிய ஆசிரியரால் கூறப்பட்டதாகும் என்பதை நாம் உணர்தல் வேண்டும். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. . 11. களவியல்-1. 12. டிெ நூற்பா உரை. (நச்)