பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழையும் உருவினன் 73

மடுத்தாங்குற வளர்ந்தான்ளன வளர்கின்றவன் உருவம் கடுத்தான்எனக் கடியாற்கெதிர்

காண்பாய்எனக் காட்டா" " அநுமன், திரிவிக்கிரம அவதாரத்தை யொத்தான் என்று யாவரும் கூறும்படி மிகவும் வளர்ந்து தன் பெரிய வலக் கையைத் துக்கினான்; அது சென்று உலகமெல்லாம் அடுத்து நிற்க, இராவணன் எதிரே நின்று இதனைக் காண்பாயாக’ என்று கூறி வீரவாதம் செய்கின்றான். பிறகு, இராவணன், அநுமன் ஆகிய இருவரிடையேயும் குத்துச் சண்டைபற்றிய சவால்கள் நடைபெறுகின்றன." இங்கு நடைபெற்றது ஒன்பதாவது பேருருவம்.

(10) இந்திரசித்து, நான்முகன் கணையை விடுத்து, இலக்குவனையும் வானரர்களையும் உயிர் ஒடுங்கச் செய்கின்றான். சாம்பவான் சஞ்சீவி கொணர முயல வேண்டும் என்று கூறி, அதனைக் கொணரத் தக்கவன் அநுமன் ஒருவனே என உணர்த்துகின்றான். அஃது இருக்கும் இடம், செல்லும் வழி முதலியவற்றை விவரமாகக் கூறுகின்றான். அதுமன் அம்மருந்தைக் கொணர ஒருப்பட்டு ஆயத்தனாகிப் பேருருவம் கொள்ளுகின்றான்.

"ஓங்கினன்வான் நெடுமுகட்டை யுற்றனன்பொற்

றோளிரண்டும் திசையோ டொக்க வீங்கினவா காசத்தை விழுங்கினனே

எனவளர்ந்தான் வேதம் போல்வான்' என்பது கம்பன் காட்டும் பேருருவச் சொல்லோவியம். உயரமாக வளர்ந்து தலை வான்முகட்டைத் தொட்டது. அவனுடைய தோள்கள் இரண்டும் திசையோடொப்ப வளர்ந்தன. ஆகாயத்தை முழுவதும் விழுங்கினான் போலப் பேருருவம் கொண்டான்.

இந்தப் பேருருவத்தின் நிலையை மேலும் விளக்குவான், கவிஞன். கோள்களும் நட்சத்திரங்களும் அநுமனுக்குக் கோத்து அமைத்த முத்து மணிகளாலியன்ற வடங்களை

25. யுத்த முதற்போர் - 162 26. யுத்த முதற்போர் - 164 - 186

27. யுத்த மருத்துமலை - 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/74&oldid=1360621" இலிருந்து மீள்விக்கப்பட்டது