பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

அண்ணா—சில நினைவுகள்


ஆனால் எதிர்க்கட்சி அமைத்திருந்த ராஜாஜியை மட்டும் வானொலி அழைத்தது! (வாழட்டும் அந்த வர்ணாசிரம வானொலி!)

பண்டித நேரு இறந்தார் என்றவுடன் கலைஞருக்கு முதன் முதலில் ஏற்பட்ட எண்ணமே, உடனே மத்திய சிறைக்குச் சென்று, அண்ணாவுக்குச் செய்தியைத் தெரி வித்து, அவரது மேலான இரங்கற் செய்தியினை நாட்டு மக்கள் அறியச் செய்யவேண்டும் என்பதுதான்! வாங்க சார், சென்ட்ரல் ஜெயிலுக்குப் போகலாம். நீங்க வந்ததில்லையே?” என்று கலைஞர் என்னையும் அழைத்தார். நான் போனதில்லைதான்! பிற்பாடு 1976-ல் எதிர்பார்த்தேன். வாய்ப்புத் தரப்படவில்லை?

அதே போல், மாலை 4 மணிக்கெல்லாம் சென்றோம். ஐந்து மாதங்கள் சிறைக்குள் வாழ்ந்த அண்ணாவைப்பேட்டி கண்டேன். நான் 1960-ல் இரண்டு நாள்தான் ரிமாண்டி லிருந்தேன். அதற்குள் சாப்பாட்டுக்கும் புகைபிடிக்கவும் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது நினைவுக்கு வந்தது. அண்ணா இப்போது மட்டுமல்ல. இதற்கு முந்திய ஆண்டும் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் வதிந்தார் பத்து வாரங்கள்!

சிறையின் சட்டதிட்டங்களின்படி, அண்ணா எழுதிய அறிக்கையை அப்படியே வாங்கி வந்து வெளியிடக் கூடாதாம்! அதனால், கலைஞர் அதைப் படித்து, மனத்தில் வாங்கி வந்தார். நாளேடுகளில் வெளியிட்டார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேரு எவ்வளவு காலம் சிறைக் கோட்டத்தில் கழித்துள்ளார்! அவர் மறைந்த நாளன்று, நமது இனத் தலைவர் அண்ணா சின்றக் கோட்டத்தில் இருந்தது எவ்வளவு பொருத்தம்!

மத்திய சிறையிலிருந்து கலைஞருடன் காரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, போன ஆண்டு நடை