பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

13




"எழுத்தோடு நின்றிருந்தால் தேவலையே, வாழ்க்கையிலும் புகுந்துவிட்டது. நான் என்ன செய்வேன்? என் கணவரோ தம்முடைய ஆண்மையை இழந்தாலும் என்மேல் கொண்ட அன்பை இழக்கவில்லை!"

"எப்படி இழக்க முடியும் இழக்க முடியாததை, இழந்தால் மீண்டும் பெறமுடியாத, அழிக்க முடியாத, அழிக்க முயல்பவர்களால் அபகரிக்க முடியாத அருஞ் செல்வமாயிற்றே, அது!"

"நானும் அவர்மேல் கொண்ட அன்பை இழக்கவில்லை!"

"ஏதோ, தமிழ்நாட்டின் தவப் பயன்; தமிழர்கள் அன்புக்கு இட்ட அஸ்திவாரத்தின் பலன்!”

"நீங்களே சொல்லுங்கள்; ஆண் கழுதை ஆண்மை இழந்தால் பெண் கழுதை இன்னொரு ஆண் கழுதையைத் தேடலாம்; ஆண் காய் ஆண்மை இழந்தால் பெண் நாய் இன்னெரு ஆண் நாயைத் தேடலாம்; ஆண் பன்றி ஆண்மை இழந்தால் பெண் பன்றி இன்னொரு ஆண் பன்றியைத் தேடலாம்; ஆண்மகன் ஆண்மை இழந்தால் பெண்மகள் - அதிலும், தமிழ்நாட்டுப் பெண்மகள்-இன்னெரு ஆண் மகனைத் தேடலாமா?"

"தேடினால் வித்தியாசம் இல்லாமற் போய்விடுமே அம்மா!"

"அதனால்தான் கடைசியாக அவரை ஏரோப்ளேனில் ஏற்றிப் பர்மாவுக்கு அனுப்பிவிட்டு, அந்த எழுத்தாளர் நீலிக் கண்ணீர் வடித்தவண்ணம்