பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

115


நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை, கோடு துணர்ந்ததன்ன குருகு ஒழுக்கு எண்ணி, எல்லை கழிப்பினம்.ஆயின், மெல்ல வளி சீத்து வரித்த புன்னை முன்றில், கொழு மீன் ஆர்க்கைச் செழுநகர்ச் செலீஇய, 'எழு' எனின், அவளும் ஒல்லாள் யாமும், 'ஒழி என அல்லம் ஆயினம், யாமத்து, உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் சில் குடிப் பாக்கம் கல்லென அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

- கண்ணம்புல்லனார் நற் 159 "நீலமணி தெளிவுற்றது போன்றது, கரிய பெரிய கடற் பரப்பு வலிய அலை மோதும் மலர் மிக்க பெரிய துறையில் நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற மணல் மேடு உண்டு. அதன் இடிந்து சரிந்த கரையில் நின்று, சங்குகள் பூத்தாற் போன்ற குருவிகளின் வரிசையை எண்ணிப் பகலைக் கழிப் போமாயின், மெல்லக் காற்றடித்துக் கோலம் செய்த புன்னை யின் முன்றிலில் கொழுமீன் உண்ணும் வளமான இல்லத் திற்குச் செல்ல எழு’ என்றால் அதற்கு அவளும் இசை வாள் யாமும் அவளிடம் ‘உன் கருத்தை ஒழி எனக் கூறும் வல்லமை பெற்றேமில்லை. எனவே தலைவ, யாமத்து உடையும் அலை ஒலியினும் துயிலும் நிரம்பிய கடற் கரை யிலுள்ள சிற்சில குடியிருப்புகளையுடைய எம் பாக்கத்தில் கல் என ஒலிக்க நீ விரும்பி ஊர்ந்து வரும் தேர் வரை வுக்குத் தங்குவதாக” என்றாள் தோழி தலைவனிடம்

207. ஒய்வுதான்் குதிரைகளுக்கு உயிர்த்தவாகுக, அளி, நாளும் - அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக் கறங்கு இசை இன மணி கையுணர்ந்து ஒலிப்ப, நிலவுத் தவழ் மணற்கோடு ஏறிச் செலவர, இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி வருந்துமன் அளிய தாமே பெருங் கடல்