பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


விளைந்த உப்பைப் பெற்று விலை கூறி விற்கும் உமணர் நீண்ட நெறியிலே வண்டிகளோடு நிலவு போன்ற வெண் மணலைக் கடந்தும், ஒரே இடத்தில் தங்கியிருப்பதை விரும் பாத சுற்றத்துடனே புலம் பெயர்ந்து போய் வாழும் அவர் வாழ்வும் பிரிவினால் இன்னாதாகும். இடங்கள் தோறும் துன்புறுத்தி அலைக்கும் ஊதைக் காற்றுடனே நீ இல்லாத தனிமைக் காலத்து மாலைக் காலமும் எமக்கு உண்டே மீன் இனத்தைத் தின்ற வெண்மையான குருகு மிதித்த நீரில்லாத நெய்தல் போல இவள் வாழாள் என்பதைச் சிந்தியாத நீ உறுதியாக அறியாமையுடையவன் ஆவாய்” என்று பொரு ளிட்டச் செல்லும் தலைவனைக் கண்ட தோழி தலைவியின் நிலையினை உரைத்தாள்.

213. எவ்வளவு துன்பம் தரப்போகிறதோ?

நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுகக், கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியப், பல் பூங் கானலும் அல்கின்றன்றே: இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, மெய்ம்மலி காமத்து யாம் தொழுது ஒழியத், தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு யாங்கு ஆவதுகொல் தான்ே - தேம்பட ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?

- ஒளவையார் நற் 187 “நெய்தல் மலர் கூம்பியது ஞாயிறு மேற்குக் குன்றை அடைந்ததால் நிழல் கிழக்கே சென்றது. நிலத்திலுள்ள வெப்பம் தணிந்தது பல மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் பொலிவிழந்தது. பொழுதிருக்கும் போதே குதிரைகளைப் பூட்டிப் பல மணிகள் ஒலிக்கத் தேர் செல்வ தற்கு முன்பு, மிக்க அன்பினாலே யாம் அவரைத் தொழுது வழியனுப்பினோம். அவர் தேர் சென்று புறத்தே மறைந்தது தேனை உண்ண வண்டுகள் ஒலிக்கும் மலர் மாலையை மார்பில் அணிந்தவர் காதலர், மின்னல் போல ஒளிவிடும்