பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

11


தோழி, செவிலித் தாயை நோக்கி, "தாயே! யான் கூறு வதை விரும்பிக் கேட்பாய்ர்க, ஒலிக்கும் கடல் அலைகள் கொணர்ந்த முத்துகள் வெண்மையான மனலில் கிடந்து விளங்கும். குளிர்ந்து துறையையுடைய தலைவன் வந்தான்் அதனால் இவளது நெற்றி பொன்னை விடச் சிவந்து விளங்கலாயிற்று” என்று சொன்னாள்.

6. இவள் மேனி பசக்கின்றது அன்னை, வாழி! வேண்டு அன்னை - அவர் நாட்டுத் துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் தண் கடல் வளையினும் இலங்கும் இவள் அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. - ஐங் 106 தோழி, செவிலியை நோக்கி, "தாயே! இதனை விரும்பிக் கேட்பாயாக அவர் நாட்டில் தோற்பை போன்ற கால்களை யுடைய அன்னப் பறவை தன் பெடையன்னம் என எண்ணித் தன் காலை வைத்து மிதித்து நோக்கும் குளிர்ந்த கடற் சங்கினை விட இவள் தன் அழகொழுகும் மேனி அவனை எண்ணி வேறுபட்டுப் பசலை வரப்பெற்றுத் தோன்று கின்றாள்" என்று சொன்னாள்.

7. அலைஒலி கேட்டு வருந்துகிறாள் அன்னை, வாழி! வேண்டு அன்னை - என் தோழி சுடர் நுதல் பசப்பச் சாஅய்ப் படர் மெலிந்து, தண் கடற் படு திரை கேட்டொறும் துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. - ஐங் 107 தோழி, செவிலித் தாயை நோக்கி, "தாயே! நான் சொல்வதை விருப்பத்துடன் கேள்: என் தோழி தனது ஒளி யுடைய நெற்றி பசலை கொள்வதால் மெலிந்து அவனையே நினைந்து மேனி வாடிக் குளிர்ந்த கடலின் அலை ஒலி கேட்குந் தோறும் அவன் தேர் மணியோசை எனக் கருதி உறங்காது வருந்துதலால் யான் வருந்துகின்றேன்” என்றாள்.

8. எம் தோள்களைக் துறந்தால்.

அன்னை, வாழி! வேண்டு அன்னை கழிய முண்டகம் மலரும் தண் கடற் சேர்ப்பன்