பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் நெருங்கு ஏர் எல்வளை ஒடுவ கண்டே.

- - நக்கீரர் நற் 258 “தலைவனே, பல பூக்களையுடைய கானலில் பகற்குறி இடத்திற்கு யான் வந்து உன்னிடம் தலைவியைத் தாய் இல்லில் செறித்தாள் என்னும் செய்தியைச் சொல்லிப் போகிறேன். கிழக்கு மலையில் தோன்றிய ஞாயிற்றின் வெயில் கால் சுடும்படியாகக் காயும். பகற் பொழுதில் செல்வமுடைய அகன்ற இல்லத்திற்கு வரும் விருந்தினரை ஒம்பவேண்டும். பொன் வளையல் அணிந்த பெண்கள் வீட்டின் பக்கம் போட்ட, கொக்கின் நகம் போன்ற வெள்ளை நிறமான சோற்றைப் பசிய கண்களையுடைய காக்கைகள் உண்ணும். உண்டபின் அவை மாலையில் அகன்ற கடைத் தெருவிற் சென்று அசையும் நிழலில் குவித்திருக்கும் இறால் மீனைக் கவர்ந்து தின்னும். அதன்பிறகு தொழிலில்லாது மிதந்து கொண்டிருக்கும் தோணியினுடைய பாய்மரத்திலே சென்று உட்கார்ந்திருக்கும். அவ்வாறான மருங்கூர்ப்பட்டினம் போன்ற அழகுள்ளவள் தலைவி. அவளது நெருங்கிய அழகிய ஒளி யுள்ள வளையல்கள் கழன்று ஒடுவதைக் கண்டு தாய் இல்லி னுள் தலைவியை வெளி வராமற் செய்தாள்” என்ற தோழி தலைவனிடம் இயம்பினாள். -

233. நாணம் விட்டுத் சொல்லத்தான்் வேண்டும்!

பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின் இறை வரை நில்லா வளையும், மறையாது ஊர் அலர் தூற்றும் கெளவையும், நாண் விட்டு உரை அவற்கு உரையாம் ஆயினும், இரை வேட்டு, கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு, முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் மெல்லாம் புலம்பல் கண்டு, நிலைசெல்லாக் கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு, உரைத்த - தோழி! - உண்கண் நீரே.

- இளவெயினனார் நற் 263