பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

143


வந்த பொழுதும் எந் நெஞ்சம் வருந்தாததாகி அவனிடம் அன்புடையதாய் இருந்தது. ஆனால், அது இப்போது நள்ளிரவில் பறவைகள் ஒலிகேட்கும் தோறும் "என் தலை வன் தேரில் கட்டிய மணியின் தெளிந்த ஒலியோ” என்று ஊரார் சோர்ந்து உறங்கும் கங்குல் நேரத்திலும் உறக்கத்தை மறந்து ஏங்குகிறதே" என்று இற்செறிப்புக் காப்பு மிகுதி போல் ஆற்றாது தலைவி புலம்பி உரைத்தாள்.

241. போர்க்களம் ஆனது என் நலன்கள்

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், தண் பெரும் பெளவ நீர்த் துறைவற்கு, நீயும், கண்டாங்கு உரையாய்; கொண்மோ - பாணl மா இரு முள்ளுர் மன்னன் மா ஊர்ந்து, எல்லித் தரீஇய இன நிரைப் பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?

- கபிலர் நற் 291

"பாணனே, நீர் தன்னிலையிலிருந்து பெயர்ந்து மாறிப் போன செறிந்த அள்ளற்சேற்றில் நிணமிக்க தலையையுடைய கொழுவிய மீன்களை உண்ணுதற்குக் குருகுக் கூட்டம் குவிந்து வெண் மணலில் ஏறி, அரசரின் ஒள்ளிய படைத் தொகுதி போல விளங்கித் தோன்றும். அக் குளிர்ந்த பெரிய கடல்நீர்த் துறைவனுக்கு உரைப்பாயாக. மிக்க பெரிய முள்ளுர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி குதிரையேறி இரவில் கொண்டு வந்து சேர்த்த பகைவர் பசுக்கூட்டத்திற்கு உரியவர்களின் முகம் வாடியிருப்பது போல, வாடியிருக்கும் இத் தலைவியது நலத்தைக் கண்டாங்கு நீயும் உரை செய்யாய், சொல்வாயா?” என்று தூதாக வந்த பாணனிடம் தோழி தலைவியின் குறிப்பறிந்து வினவினாள்.