பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வரிகள் பொருந்திய சிறிய மனைகளை அலங்கரிக்கும்படி யான துறைவனே, உயர்ந்த அலைகளையுடைய கடலின் மேலே பலரும் தொழும்படி தோன்றி, யாவரும் மகிழும்படி விளங்கும் ஞாயிறு போன்ற வாய்மை நிரம்பிய உம் சொல்லை விரும்பியவர்களுக்கு நீ நற்பண்பு உடையவனில்லை போலும்! சிலவாகிய மெல்லிய கூந்தலையுடைய எம் தலைவியின், திறமையாளர்கள் ஆராய்ந்து தெரிவித்தபடி அமைந்த பழமை யான அழகு தொலைந்து போக, வருத்தம் செய்பவர் ஆகுதல் தகுமோ? நீரே ஆராய்ந்து சொல்லும் செய்யும்” என்று பகற் குறி வந்த தலைனைத் தோழி விரைந்து மணம் முடிக்கக் கூறினாள். --

240. தேர் ஒலி கேட்கையில் வேர்க்குது நெஞ்சம்

'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிப், பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த நல் எயிலுடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போல - கொடுங் கழிப் பாசடை நெய்தற் பணி நீர்ச் சேர்ப்டன், நாம முதலை நடுங்கு பகை அஞ்சான், காமம் பெருமையின், வந்த ஞான்றை - அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் நள்ளென் கங்குல் புள்ஒலி கேட்டொறும், தேர்மணித் தெள் இசைகொல்?’ என, ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.

- உலோச்சனார் நற் 287 "வானம் போல உயர்ந்த மதில் கெடும்படி முற்றி, பசிய கண்களையுடைய யானைப்படைப் பகைவேந்தன் புறத்தே இருந்தகாலை, அந்த நல்ல எயிலையுடையவர்கள் ‘யாம் பாதுகாவலரைப் பெற்றுள்ளோம் என்று கருதத் தக்க வகையில் பெருந்தகை மறவன் ஒருவன் உறக்கம் மறந்து காவல் செய்து மதிலினுள்ளே இருப்பது போல என் நிலை ஆனது. வளைந்த கழியின் பசிய இலையைடைய நெய்தலின் மிக்க நீரையுடைய சேர்ப்பன் அஞ்சத் தக்க முதலையின் நடுங்கும் பகைக்கும் அஞ்சானாய் காதல் மிகுதியால் இரவில் இங்கு