பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


விழும் பறவைகளை ஒட்டுவர். மட நோக்குடைய ஆயமொடு சேர்ந்து பரதவர் மகளிர் ஊர்ந்து ஏறி உப்புக்குவியலில் நின்று, வளைந்த கடல் நீரில் மீன் வேட்டைக்குப் போயிருந்த சுற்றத்தாரது திண்ணிய மீன் படகை, 'இது எந்தை திமில், அது நுந்தை திமில்' என்று எண்ணுவர். அக் குளிக்கடல் சேர்ப்பனே, வெறுப்பில்லாத எம் நல்ல ஊர் இனியதே. இப்போது நீ அங்கு வந்தாலும் தவறில்லை. தமர், தமரை அறியாத சேரி அது. ஆதலால் பிறர், பிறரை எந்த அளவும் அறிவது எப்படி? ஆதலின் ஐயமின்றி வருக” எனத் தோழி தலைவியை இரவில் வந்து காணுமாறு தலைவனிடம் உரைத்தாள்.

252. காமம் மிகுதி களைவார் இல்லையே! திங்களும் திகழ் வான் ஏர்தரும், இமிழ் நீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஒவாதே; ஒலி சிறந்து ஒதமும் பெயரும், மலி புனற் பல் பூங் கானல் முள் இலைத் தாழை சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு மை இரும் பனைமிசைப் பைதல உயவும் அன்றிலும், என்புற நரலும், அன்றி, விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் யாமம் உய்யாமை நின்றன்று; காமம் பெரிதே களைஞரோ இலரே!

- வெள்ளிவீதியார் நற் 335 "திங்களும் திகழும் வானத்தில் தோன்றுகின்றது. கடலும் பொங்கும் அலையோடு ஒலிக்கின்றது. கடல்நீரும் ஒலி மிகுந்து கரையை உடைத்துப் புறப்படுகிறது. தாழையும், நிரம்பிய நீரையும் பல பூவையுமுடைய கானலில் முள்ளுடைய இலையைக் கொண்டது. சோறு எடுத்துச் சொரியும் அகப்பை போலக் கூம்பிய அரும்பு மலர்ந்து நறுமணத்தைக் காற்றில் வீசுகிறது. காற்று, விளிவில்லாத அம் மணத்தோடு கரிய பெரிய பனையில் மோதுகிறது. அன்றில், அப் பனை முரத்தில் உள்ளது. என் பக்கத்து வந்து எலும்பு உருகக்