பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்; நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண் அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? மாலை நீ என் கேள்வற் தருதலும் தருகல்லாய், துணை அல்லை; பிரிந்தவர்க்கு நோய்ஆகி, புணர்ந்தவர்க்குப் புனை ஆகித் திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு? என ஆங்கு ஆய் இழை மடவரல் அவலம் அகல, பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல, போய் அவர் அன் வெளவி வந்தனர்சேய் உறை காதலர் செய் வினை முடித்தே. - கலி 148 ஞாயிறு தன் கதிர்களால் உலகத்தில் தான்் செய்து வரும் பொருள்களை விளக்குபவன் அத் தொழிலில் அவன் ஊன்றி நடத்தி வந்தனன் அவனைக் காமன் நான் தலைவரைப் பிரிந்திருந்தாரை வருத்துவதற்கு நீ செல் என்று கூறினான்.அச் செயலை மேற்கொண்ட ஞாயிறு போவான் போல் மறை மலையைச் செர்ந்தான்் பல உயிர்களும் தன் கண்களால் கொள்ளும் பயன் கெடுமாறு போனான் தீவினையைப் போக்குகின்றவனின் அருளுடைய முகம் போன்று திங்கள் கடல் மலைமேல் தோன்றி மயக்கத்தையுடைய இருளைப் போக்கினான் போக்க, பொருள் இல்லாதவர் நடத்தும் இல்லறம் போல் கரிய கழியின் பூக்கள் குவிந்தன அவ் அமயத்துத் தலைவனைப் பிரிந்த தலைவி தேயும் என் உயிர்ப் புறத்தில் வந்துவிட்ட மாலையே! நீ அறிவு மயங்குதலை யுடைய மாலையாய் இருந்தாய் என்று சொன்னாள்

அவ்வாறு சொன்னவள், “அதற்குக் காரணம் என்ன வென்றால், மாலையே! தலைவருடன் கூடி இன்பம் அடைந்த வர்க்கு அன்பாய், அவர்கள் தங்களுக்குள் ஒன்று கூடும் நிலைமையை முன்னம் செய்து போனாய் இப்போது ஆடவர் தம் மீது அன்பு கொண்ட மகளிர் அழும்படி தம்மைக் கை விட்டதால் உண்டான அல்லலிடத்தே பொருந்தித் துன்புற்ற மங்கையரை வருத்துதல் உனக்குத் தகுதியன்று”