பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

43


கொண்கனின் அன்புமகள் நீக்க முடியாத துயரத்தைத் தந்து, கண் மூடுதலான இனிய உறக்கத்தைக் கவர்ந்து கொண்டாள். எனவே யான் ஆற்றுவது எப்படி?” என்று தலைவன் இல்லற மற்றுத் தனித்து வாழ்தலைக் கூறினான்.

94. மணந்து கொள்வாய்! கோடு ஈர் எல் வளைக் கொழும் பல் கூந்தல், ஆய் தொடி, மடவரல் வேண்டுதி ஆயின் - தெண் கழிச் சேயிறாப் படுஉம் தண் கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. - ஐங் 196 தோழி தலைவனை நோக்கி, ‘சங்கை அறுத்துச் செய்த வளையையும், கொழுவிய கூந்தலையும், துண்மையான தொடியையும் உடைய இவளைக் கூடுதல் வேண்டினாயாயின், தெளிந்த நீரையுடைய உப்பங்கழியில் வேண்டுவார் கொள்ளு மாறு செவ்விய இறால் மீன்கள் அகப்படும் குளிர்ந்த கடல் நிலைத்தலைவனே! வாழ வேறுவகை இல்லாமையால் விரைந்து மணந்து கொள்வாயாக!” என்று சொன்னாள்.

95. மார்பை மகிழ்ந்து அளிப்பாள் இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி, முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே - புலம்பு கொள் மாலை மறைய - நலம் கேழ் ஆக நல்குவள் எனக்கே. - ஐங் 197 தலைவன், “விளங்கும் வளைகள் ஒலிக்க, நண்டைக் காலால் அலைத்து, முகத்தை மறைக்கும் கூந்தலையுடைய வளாய்த் தலை குனிந்து நின்றவள் தனிமை கொள்ளும் மாலைப் பொழுது மறைதலும், நன்மை பொருந்திய தன் மார்பை எனக்கு அளிப்பவள்” என்று மகிழ்ந்து சொன்னான்.

96. தலைவனைக் காண்போம் வருக வளை அணி முன் கை வால் எயிற்று அமர் நகை இளையர் ஆடும் தளை அவிழ் கானல், குறுந் துறை வினவி நின்ற நெடுந் தோள் அண்ணற் கண்டிகும், யாமே. - ஐங் 198