பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தோழி தலைவியை நோக்கி, "வளையணிந்த முன் கையையும், வெண்மையான பற்கள் விளங்கும் முறுவலையும் உடைய இளைய மகளிர் ஆடும் முறுக்கவிழும் மலர்களை யுடைய கானலில் குறுந்துறை எங்குள்ளது என வினவி நின்ற பெரிய தோள்களையுடைய தலைவனைக் காண்போம், வருக!” என்று போற்றா ஒழுக்கம் புரிந்து திரும்பிய தலைவனைக் கண்டு கூறினாள்

97. மணல்திடல் ஏறிக் காதலன் வரக் காண்போம்!

கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும் வான்உயர் நெடுமணல் ஏறி ஆனாது காண்கம் வம்மோ - தோழி செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே! - ஐங் 199 தலைவன் பிரிந்த போது தோழி,“நம் முன்கையில் செறிந்து நின்ற வளைகள் நெகிழ்ந்தோடச் செய்த தலை மகனின் அலை வீசும் கடல் நாட்டைக் கானல் பெருந் துறையில் ஒலிக்கும் அலைகள் வந்து அலைக்கும் வான் உற உயர்ந்த நெடிய மணல் திடர் மேல் ஏறி அவனது வரவைக் காண்போம்!” என்று ஆற்று வித்துச் சொன்னாள்

98. பசலை கேட்டைக் காண்போம்! இலங்கு வீங்கு எல்வளை, ஆய்நுதல் கவினப் பொலந்தேர்க் கொண்கள் வந்தனன் இனியே, விலங்கரி நெடுங்கண் ஞெகிழ் மதி நலங்கவர் பசலையை நகுக நாமே. - ஐங் 200 தோழி, “விளக்கமுற நெகிழ்ந்து விளங்கும் வளையை உடையவளே, நின் ஒளி நுணுகிய நெற்றி அழகு அடையு மாறு பொன்னாலான தேரையுடைய நெய்தல்நிலத் தலைவன் இப்போது தன்னுடன் நின்னை அழைத்துக் கொண்டு போதற்கு வந்திருக்கின்றான். ஆதலால் விலங்குதலையுடைய அரி பரவிய நெடிய கண்கள் உறக்கம் நீங்கித் தெளிவாயாக, அதனால் நம் நலம் கவர்ந்த பசலையின் கேட்டைக் கண்டு நாம் மகிழலாம்” என்று உரைத்தாள்.