பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

53


மார் ஏறிச் சென்ற மீன் படகுகள் மீண்டு வரும் நேரமும் ஆகியதே' என்று தலைவி தலைவனுக்கு ஏங்கி வருந்தி உரைத்தாள்.

16. தனிமை நீடித்தால் இறந்துவிடுவேன்

இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே, உளெனே வாழி - தோழி, - சாரல் தழை அணி அல்குல் மகளிருள்ளும் விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல் பறை வலம் தப்பிய பைதல் நாரை திரை தோய் வாங்கு சினை இருக்கும் தண்ணம் துறைவனோடு, கண்மாறின்றே.

- அம்மூவன் குறு 125 "தோழியே! மலைச் சாரலில் விளைந்த தழையினால் ஆகிய உடையை அணியும் அல்குலையுடைய மகளிர் யாவரினும், விழாவைப் போலச் சிறப்புடன் முன்பு விளங்கிய என் பெண்மை நலமானது பழைய ஆற்றலையுடைய சிறகின் வன்மை தவறியதனாலே துன்பம் கொண்ட நாரையானது, அலைகளைத் தொட்டு வளைந்து சாய்ந்திருக்கின்ற மரக் கிளையில் பறத்தற்கு இயலாது தங்கியிருக்கும் குளிர்ந்த கடல் துறைக்குரிய என் தலைவனோடு என்னை விட்டுப் பிரிந்து சென்று இடம் பெயர்ந்தது. அந் நிலையில், யான் மட்டும் விளங்குகின்ற வளைகள் நெகிழும்படி மெலிந்து இன்னும் உயிருடன் இருக்கின்றேனே" என்று மணம் முடி யாமையால் வாடி வருந்தினாள் தலைவி.

17. நெஞ்சே நீ தீயூழ் உடையை

குன கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அனவற்தாங்குச் சேயள் அரியோட் படர்தி, நோயை - நெஞ்சே - நோய்ப் பாலோயே.

- பரணர் குறு 128