பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


"நெஞ்சமே! கீழ்க்கடலின் அலைக்கு அருகிலுள்ளதாகிய முதுமையால் சிறகுகள் நீங்கப் பெற்ற நாரை திண்மையாகிய தேரையுடைய சேரனது மேல் கடற்கரையில் அமைந்த ‘தொண்டி’ என்ற பட்டினத்தில் உள்ள அயிரை மீனாகிய பெறுவதற்கரிய அரிய உணவைப் பெறும் பொருட்டுத் தலையை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்தாற் போல நெடுந்துரத்தில் உள்ளவளும், பெறுதற்கு அரியவளும் ஆகிய தலைவியை நினைத்தாய்; அதனால் துன்பத்திற்குக் காரண மான ஊழ் வினையை உடைய வருத்தத்தை அடைந்தாய்." என்றான் தலைவன் தன் நெஞ்சிற்கு

18. என்னைத் தேற்றாத ஊர்

உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி - கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள், துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.

- கொல்லன் அழிசி குறு 145 "கடல்துறை பொருந்திய இந்தச் சிற்றுார் நாம் தங்கி யிருப்பதற்குத் தகுதியுடைய ஊரன்று, ஏனெனில் கடற்கரைச் சோலையை உடைய தலைவனது கொடுமையை நினைத்து மிகுகின்ற துன்பத்தோடு வருந்தியவராய், நடு யாமத்திலும் தூங்காது தங்குவாரை ஏனென்று வினவாது துணிந்து துயில் கின்ற கண்களையுடைய அறிவற்ற மக்களோடு நெடிய இராப் பொழுதையும் உடையது” என்று வரைவிடை ஆற்றாது வருந்தி சொன்னாள் தலைவி தோழியிடம்.

119. வருத்தமுற்றது யாரால் யார் அணங்குற்றனை - கடலே பூழியர் சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை, வெள் வித் தாழை திரை அலை நள்ளென கங்குலும் கேட்கும், நின் குரலே?

- அம்மூவன் குறு 163