பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ Ꮡ

நின்ற புன்னை நிலம் தோய் படு சினை

வம்ப நாரை சேக்கும்

தண் கடற் சேர்ப்ப! நீ உண்ட என் நலனே.

- நரிவெரூஉத்தலையார் குறு 236.

“குன்றைப் போன்ற குவிதலை உடைய மணல் அடைந்த கரையின் இடத்து வளர்ந்து நின்ற புன்னை மரத்தினது, நிலத்தைத் தோய்ந்த தாழ்ந்த கிளையில் புதிய நாரை தங்கும் தண்ணிய கடற்கரையைப் பெற்ற உடைய தலைவனே, இவளை நீ கைவிட்டாய் என விடுக்கும் காலம் வருவதாக அதற்கு நீ உடன்படுவாய் ஆயின் நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தை மீண்டும் எம்மிடம் தந்து செல்வாயாக!” என்று தோழி தலைவனிடம் கூறி அவன் பிரிவைத் தடுத்தாள்.

135. உள்ளேன் தோழி

மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை உள்ளேன் - தோழி - படிஇயர், என் கண்ணே.

- நம்பி குட்டுவன் குறு 243 "தோழியே, மானின் குளம்பைப் போன்ற பிளவுடைய இலைகளை உடைய அடும்பின் கொடியினது, குதிரை கழுத்தில் இடும் மாலையின் கண் உள்ள ம்ணியைப் போன்ற ஒள்ளிய பூக்களை, வலிய அலர்த்தி, ஒள்ளிய வளைகளை உடைய பெண்கள் வண்டலில் விளையாட்டைச் செய்யும், பறவைகள் ஒலிக்கும் பெரிய கடற்கரைக்குத் தலைவனை இனி நினையேன் ஆதலின் என் கண்கள் இனித் துயில் கொள்ளுமாக" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

136. பிறர் அறிந்தால் பெருந்துயராகும் கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்ததனினும், நனி இன்னாதே - வாள் போல் வாய கொழுமடல் தாழை மாலை வேல் நாட்டு வேலி ஆகும்