பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.

- மாலை மாறன் குறு 245 "தோழி! வாளரம் போன்ற விளிம்பை உடைய கொழுவிய மடலை உடைய தாழையானது, வரிசையாக உள்ள வேல் களை நாட்டிய வேலியைப் போலப் பயன்தரும், மெல்லிய கடற்கரையை உடைய தலைவன், என் மாட்டுச் செய்த கொடுமை, பலர் அறியும் வண்ணம் பரவி வெளிப் பட்டால், அங்ங்னம் வெளிப்படுதல் அழகிய கடற்கரைச் சோலையிலே விளையாடும் மகளிர் கூட்டத்தினர் பாராட்டிய எனது பெண்மை நலத்தை நான் இழந்ததைக் காட்டிலும் மிக இன்னாமையைத் தருவதாகும்” என்றாள் தலைவி தோழியிடம் 137. வருந்துகின்றாள் தாய் 'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கிப், பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஒர் தேர் வந்து பெயர்ந்தது என்ப, அதற்கொண்டு, ஒரும்அலைக்கும் அன்னை; பிறரும் பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் இளையரும் மடவரும் உளரே, அலையாத் தாயரொடு நற்பாலோரே. - கபிலர் குறு 246 "தோழியே, பெரிய கடற்கரையின்கண் உள்ளதாகிய சிறிய வெண்மையான காக்கை, களிற்றினது காதைப் போன்ற பசிய இலையைக் கலக்கிக், குளிர்ச்சியை உடைய கழிநீரை இரையின் பொருட்டுத் துழாவிக் கொண்டிருக்கும் நள்ளிரவு வேளையிலே, தனியாக ஒரு தேர் இங்கே வந்து மீண்டு சென்றது என்று அயலார் கூறுவர் அது தொடங்கித் தாய் என்னைத் துன்புறுத்துகின்றாள் பின்னலிடப்பட்ட கூந்தலை யுடைய மின்னுகின்ற பொற்கலன்கள் அணிந்த பெண்கள் கூட்டத்துள் இளமை உடையோரும் மடப்பம் உடையோ மாகிய பிறரும் இருக்கின்றனர். அவர், தம்மை வருத்துதல் இல்லாத தாயரோடு நல்வினையை உடையவராவர்” என்றாள் தலைவி