பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து. எமரும் அல்கினர்; ஏமார்ந்தளம் எனச் சென்று நாம் அறியின், எவனோ - தோழி, மன்றப் புன்னை மாச் சினை நறு வீ முன்றில் தாழையொடு கமழும் தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?

- நெய்தல் தத்தனார் நற் 49 “பெரிய அலைகள் கொழித்த பால் போன்ற நிறத்தை யுடைய மணல்மேட்டில் வளையல்களையுடைய பெண்கள் செயற்படாததால் அத் துறை தனிமையாயிற்று முடிச்சு களைக் கொண்ட வலையால் முகந்த வளைந்த இறால் மீன்கள் கடல் போல் பரந்து கிடப்பதில் வந்துபடியும் பறவைகளை ஒட்டுதலால் பகல் மறைந்தது. கொம்பையுடைய மீன்களை வேட்டையாடிய மகிழ்ச்சியினராய் வேட்டை யாடுதலை விட்டு நம் உறவினரும் இல்லத்தில் தங்கினர் ஆதலால் தோழி, பரதவர் முற்றத்திலிருக்கும் பொது மன்றம் போல் அமைந்த புன்னை மரத்தின் பெரிய கிளையிலுள்ள் நல்ல மலர்கள் அயலிலுள்ள தாழையொடு சேர்ந்த கமழும் தெளிந்த கடற் சேர்ப்பன் வாழும் சிறிய நல்ல ஊர்க்குச் சென்று நாம் அவனிடம், "நீ இல்லாததால் மனங் கலங்கி னோம்” என்று கூறி அவன் கருத்தை நாம் அறிந்தால் குற்றம் என்ன?” எனத் தோழி இரவுக் குறிக்கு இசைய தலைவி யிடம் வினவினாள்

179. நாரையே தூது செல்லாய்

வளை நீர் மேய்ந்து, கிளை முதல் செலீஇ வாப் பறை விரும்பினை ஆயினும், துச் சிறை இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து - கருங் கால் வெண் குருகு - எனவ கேண்மதி: பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; அது நீ அறியின், அன்புமார் உடையை, நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை இற்றாங்கு உணர உரைமதி - தழையோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்