பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தம்.

  
எழிலோ டெழில்க டந்த
இன்பமா எழிற்பே ராழி !
அழியாது காதல் வாழ்வில்
அற்புத வடிவாய் வந்தாய் !
கொழித்திடும் அமுத வெள்ளம்
முக்கனி குளிர்தேன் கன்னல்
வழிந்திட இன்ப முத்தம்
தந்திட வாராய் செல்வா!

21