பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:32 அருணகிரிநாதர் வேலை நகர் (39), மனுேகர செந்தில் (48), கயிலைமலை யனைய செந்திற் பதி (51), முன்றிலின்புறம் அலை பொருத செந்தில் (52), தெருவிலேயு நித்திலமெறி அலைவாய் (63), சம்புபுகழ் செந்தில் (65), சீரலைவாய் நகர் (75), வாரிதி நீர்பரந்த சீரலைவாய் (84), செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற்பதி (95), சுந்தரமான செந்தில் (98)-எனப் பலவாறு புகழ்ந்தார். மூதேவியாகிய என்னை அழைத்து உனது பாதுகையைத் தந்தருளுதி (26) எனவும், எனது தலையிற் உனது திருவடியை (மறுமுறை) வைத்தருளுதி (20) எனவும் வேண்டினர். இத்தலத்திலிருந்து தானே வீரவாகு தேவர் சூரனிடம் துாது சென்ருர் என்பது நினைவுக்கு வர வீரவாகு தேவ ரைப் புகழ்ந்தார் (20), ஆறெழுத்தின் தியானத்தை வேண்டியும், பல தலப் பெயர்களைக் கூறியும் துதித்தார் (28), தேவர் சேனதிபதியாய் வீற்றிருக்கும் பெருமானைக் கண் குளிரத் தரிசித்துப் பல நாள் திருச்செந்துாரில் தங்கிப் பாடல்கள் பாடி மகிழ்ந்தார். பழநிக்கு அடுத்த படியாகத் திருச்செந்துாருக்குத் தான் பாடல்கள் அதிகம் (83 பாடல் கள்). இத்தலத்துக்குரிய பாடல்களில் உள்ள சில விசேஷக் குறிப்புக்களைக் கூறுவாம். - () 26 அனிச்சம் என்னும் பாடலில் தம்ம்ை விடக்கு அன்பாய் நுகர் பாழன்' என்ருர். (விடக்கு-புலால்) இதைக் கொண்டு இவர் புலால் உண்ணும் குலத்தினர் என் ருவது வேசையர் உறவால் புலால் உண்டார் என்ரு வது கொள்ளுதல் கூடாது; ஏனெனில், கந்தரந்தாதி யில் வேதியர்கள் யாகத்துக்காக ஆட்டைப் பலி கொடுக்கும் வழக்கத்தை 'அஜ வநியாயஞ் செய் வேதியரே (31) எனக் கூறிக் கண்டித்துள்ளார். (ii) 33 பருத்த-எனத் துவக்கும் பாட்டில் எனக் கென்றே சிறப்பான பொருளமையும் தமிழ்ச் சொற்களைத் தந்தருளுக என வேண்டினர். -- : (iii) 37, 38 (சங்கு போல், பங்கமே) பாடல்களிற் பிரானைச் ‘செந்தமிழ்ப் பெருமாளே எனப் போற்றியும்