பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 99 மொடு வாது செய்து தோற்றவர்களது காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தைத் தமது கல்விச் செருக்ாற் கையாண்டவரும், மிக அற்புதமான வாக்கிற் பாரதத்ப்ை பாடியவருமான வில்லிபுத்துாரர் என்னும் புலவ ரொடு வாது செய்ய நேர்ந்தது. அப்பொழுது ஆசுகவி யா கர் சுவாமிகள் பாடிய நூல்தான் ‘கந்த ரந்தாதி” என் றும், அந்நூலுக்கு உரை வில்லிபுத்துாரரே செய்தனரென் றும், அதில் திதத்த’ என்று தொடங்கும் 54-வது செய்யு யுவருக்கு அவர் உரை கூறமாட்டாது திகைத்துத் தோல்வி புற்றனர் என்றும், அச்செய்யுளுக்கு அருணகிரிநாதரே உரையருளிச் செய்தார் என்றும், வாதில் தோல்வியுற்றவ ருடைய காதை அறுக்க வேண்டும் எனச் செய்த ஏற்பாட் டின் படி 1 வில்லிபுத்துாரரது காதை அறுத்து இழிவு படுத்தாது, இனிக் கருணைக்கு விரோதமான இவ் வழக்கத் தை நீங்கள் விட்டுவிட வேண்டும்” என அவருக்குப் புத்தி பெல்லி அவர் கையிலிருந்த குறடாவை 2 எறியச் செய்தனரென்றும், இதல்ை அருணகிரிநாதரின் கருணைக் குணத்தை யாவரும் பாராட்டி வியந்தனரென்றும் ஆன்ருேர் கூறுவர். இக்காரணத்தாலும், உலக துன்பங்களுக்கு அடிப் படைக் காரணமான 'பெண்ணுசையை ஒழியுங்கள், ஈதலே அறம் என்று கடைப்பிடியுங்கள் என்னும் சிறந்த உபதேசங் ,%ளயே உலகுய்யச் சுவாமிகள் பன்முறை எடுத்தெடுத்து ஆதியுள்ள காரணத்தாலும் 'கருணைக்கு அருணகிரி” எனப் பழமொழியும் ஏற்பட்டது. 'காசுக்குக் கம்பன், கருணைக் கருணகிரி, ஆசுக்குக் காளமுகி லாவனே;-தேசுபெறும் 1. அக்கிளிதான்-வில்லிபுத்து ரான்செவியில் மேலரி வாள் பூட்டி யன்று வல்லபத்தின் வாதுவென்று வந்ததுகாண்' -தணிகையுலா. *2. எதிரும் புலவன் வில்லிதொழ எந்தை யுரைக்கந் தாதி சொ(ல்)லி ஏழைப் புலவர் செவிக்குருத்தோ டெறியுங் கருவி பறித்தெறிந்தே-திரும்லை'முருகன் பிள்ளைத் தமிழ்.