பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 177: 'வரிசை தரும் பதம் அது பாடி-வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’ திருப். (962) என்பது. பிரசாதங்களைத் தரும் உனது அருட்பாதத்தை வளப்பம் பொருந்திய செந்தமிழால் நான் பாடவேண் டும் : அன்பர்கள் அதைக் கேட்டும் ஒதியும் மகிழவேண் டும். இந்த வரத்தைத் தந்தருள் என்றனர். இவ்வேண்டு கோளே சீர்பாத வகுப்புப் பாடுவதற்கு வித்து என்க. (பக்கம் 89-90). பின்னர்ப் பொதுப் பாடல் ஒன்றில்'முருகா! உனது சீர் பாதங்களின் பிரசித்தி முதலாய பல லகஷனங்களையும் வகுத்து வகுத்து உரைக்க விரும்புகின் றேன். அந்தத் திருப்பணி நிறைவேற எனக்கு முத்தமிழ்ச் செல்வத்தைத் தந்தருளுக “நின்பத யுகப்ரசித்தி என்பன வகுத்துரைக்க நின்பணி தமிழ்த்ரயத்தை யருள்வாயே, (திருப். 1233) -என வேண்டின வேண்டுகோள் சீர்பாத வகுப்பு ஆதிய கால்லா வகுப்புக்களுக்கும் வித்தாகும். வேண்டுவார் வேண்டுவதே ஈவான்’ அல்லனே இறைவன். அங்ங்னமே திருவகுப்புப் பாடும் பேரருளை “அருணகிரியார்க்கு இறை வன் பாலித்தான். இதுவே திருவகுப்பு வரலாறு: திருவகுப்பின் பொருள்பற்றி ஆராயப் புகுந்தால் கீழ்க் காட்டப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் வெளிவருகின்றன: (i) திருப்புகழ், அநுபூதி, அலங்காரம் என்னும் நூல் களிற் பெண்கள் மயக்கினின்றும் என்னை விலக்கிக் காத் தருள் எனக் கேட்டுக்கொண்ட பேச்சே திருவகுப்பிற் கிடை யாது. (ii) யம பயத்தினின்றும் காத்தருள் என்னும் யம. பயக் குறிப்பே எங்கும் (சேவகன் வகுப்பு ஒன்று தவிர) கிடையாது. - (குறிப்பு:-முதல் பதினெட்டு வகுப்பே அருணகிரியார் திருவாக்கு என்னும் கொள்கையில் இவ்வாராய்ச்சி எழுதப் படுகின்றது.) அ-12