பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அருணகிரிநாதர். (9) இறுதிக் காலத்தில் இறைவனது நினைவு வர : 'காலன்...எனதாவி தனையே குறுகி வருபோது ஆதிமுரு காதிழுரு காதிமுருகர் எனவும் ஆதிமுரு காநினைவு தருவ்ரியே’ (திருப்.1242) (10) மோகம் அற : 'மோகாந்த காரந் தீர்க்க வேதாந்த தீபங்காட்டி யருள்வாயே’ (திருப். 1257) (11) யான் எனது அற: 'யானெனதற்_றிடுபோதம் யானறிதற் கருள்வாயே’ (திருப்.1291) (12) பிறவி யற: 'வாழி! இனிப் பிறவாது நீ யருள் புரிவாயே (திருப்.1204) மேற்காட்டிய பன்னிரு வேண்டுகோள்களைப் பார்க் கும் பொழுதே சுவாமிகள் எத்துணை உத்தம திடபத்தர் என்பதும், உத்தம குணத்தினர் என்பதும் எளிதில் விளங்கு கின்றன. முருக வேளின் முன்னிலையில் இப்பன்னிரு வேண்டுகோள்களையும் காலையிலும் மாலையிலும் நாமும் தவ. ருது முறையிட்டுப் பணிந்து உய்வோமாக! XVI. அருணகிரியாரும் நால்வரும்: இத்தகைய பெருமை வாய்ந்த எங்கள் அருணகிரிநாத சுவாமிகளுக்கும் தேவார திருவாசகம் அருளிய நால்வருக் கும் உள்ள ஒற்றுமை நயங்களை எடுத்துக்காட்டுவாம். இறைவனை அடைதற்குரிய மார்க்கங்கள் நான்கு எனவும், அவை புத்ர மார்க்கம், தாச மார்க்கம், சஹ மார்க்கம், சிஷ்ய மார்க்கம் எனப்படும் என்றும், புத்ர மார்க்கமாய் (பிள்ளை போல அன்பு காட்டி) இறைவனை அடைந்தவர் சம்பந் தர், தாச மார்க்கமாய் (அன்புடன் ஊழியஞ் செய்து) இறை வன அடைந்தவர் அப்பர். சஹ மார்க்கத்தில் (நண்பனுய் அன்பு செலுத்தி) இறைவனை அடைந்தவர் சுந்தரர், சிஷ்ய மார்க்கத்தில் (மாணுக்களுய் அன்பு செய்து) இறைவனை அடைந்தவர் மாணிக்கவாககர் எனவும் பெரியார் கூறு