பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 55 வனத் தனிப் பிரார்த்தனை ஒன்றுஞ் செய்தார். இவ் வேண்டு கோளின் படி கலங்காத சித்தத்தை முருக பிரான் தமக்கு அருளினர் என்பதைக், 'கடத்திற் குறத்தி பிரான் அருவிரற் தலங்காத சித்தத் திடத்திற் புனையென யான் கடந்தேன்...காம சமுத்திரமே.” (கந். அலங். 29) என்னும் பாடலால் தெளிவாய்த் தெரிவிக்கின்ருர். (iv) முருகன் பெருமையை மூவர்க்குந் தோற்றக் கிடையா நீ எனப் பொருள்படும்படி இவர் "கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங்1, கூட்டிக் கன்றை மேய்த்திட் டவர்க்குங்2, கூற்றைக் கன்ற'மாய்த்திட் டவர்க்குந்3, தோற்றக் கிடையா நீ' –373 No ! ዕWI இணையிலாச் சொல்லழகுடன் அமைத்த சொற் பிர யோகம் ஆயிரங்கோடிபெறும். (v) 376-ஆம் பதிகத்தில்-'பைம் பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச் சென் ருே.ாட்டிய வயலூரா’-என்றதில் அன்பன் யார்-என்று விளங்க வில்லை. அந்த அன்பன் மகா பத்தனை நல்லியக் கோடனுய் இருக்கலாமோ என ஒர் ஐயம் நிகழ்கின்றது. நல் லியக் கோடர்ன் என்னும் அரசன் தனது பகைவர்களின் பலத்திற்கு அஞ்சி முருகக் கடவுளை வழிபட்ட பொழுது ‘கேணியில் உள்ள பூவைப் பறித்து அதையே வேலாக நிருமித்துத் தியானித்து எறி, நீ வெல்வாய்', என முருக வேள் அவன் கனவிற் கட்டளையிட, நல்லியக் கோடன் அங் கனமே செய்யப் பகைத்தளம் பறந்தது என்பதும், அங்ங்ணம் வேலால் வெற்றி பெற்ற இடம் வேலூராயிற்று என்பதும் சிறுபாணுற்றுப் படையில் (பத்துப் பாட்டில் ஒன்று) 'திறல் வேல் நுதியிற் பூத்த கேணி, விறல் வேல் வென்றி வேலூர்'-(172-3) என வருவதாலும் அதன் உரைப் பகுதி யாலும் அறியக் கிடக்கின்றன. 1 பிரமன் 2 திருமால் 3 சிவன்.