பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 அருணகிரிநாதர் (wi) 379, (ஆலகால)-எனும் பாட்டில் 5-7 அடிகளில் ராமாயண சுருக்கத்தைக் காணலாம். (vii) திருச் செங்கோடு மறை பூசித்த தலம் என்பதைத் திருப்புகழில் 'மறை குலாவு செங்கோடை நகர் (374) என வருதலாலும், கந்தரந் தாதியில் செழு மறை தேர் புஜக பூதரம் (82), ஆரனத் தந்தி நகர் (23), ஆரண வெற்பு (68), ஆரனத் தந்தி கிரி (90) என வருதலாலும் அறி கின்ருேம். (viii) திருச் செங்கோடு அர்த்த நாரீசுரர் தலம் என் பதைப் பெரியோனும் தலைவியும் பக்கத் தொக்க இருக்கும் சயிலம் (454) எனக் காஞ்சி நகர்த் திருப்புகழிற் குறித்துள் бIТПГПГ. (ix) சுவாமிகள் திருச் செங்கோட்டுக்கு வரும் முன் னரே-இவர் பாடிய அற்புதத் திருப்புகழ்ப் பாக்களின் பெருமை நாடெலாம் பரவிப் போற்றப்பட்டது. ஞானி யரும் புலவரும் திருப்புகழ்ப் பாடல்களின் சொல்லழகையும் பொருளாழத்தையும் கண்டு வியந்தனர் : கற்று மகிழ்ந் தனர் ; இதனை யுணர்ந்த அருணகிரியார்-திருச் செங் கோட்டுப் பெருமானே 1 நாற்றிசையிலும் உள்ள பக்தர்கள் ‘அற்புதம் என வியக்கும்படியான சந்தம் நிறைந்த உனது திருப்புகழ்ப் பாவைச் சிறிது ஒத அநுக்கிரகஞ் செய்த உனது கருணையை மறவேன் பூர்வ பச்சிம தகூகின உத்தர திக்குள பக்தர்கள் அற்புதழென ஒதும் சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப் புகழ்ைச் சிறி HH தடியேனும் செப்பென வைத் துலகிற் பரவத் தெரிசித்த அநுக்ரகம் மறவேனே' (384) எனத் தமது ஆண்டவரையே பாடி நன்றி பாராட் டினர். (பூர்வம்=கிழக்கு: பச்சிமம்=மேற்கு, தகூகிணம்= தெற்கு உத்தரம்=வடக்கு) செய்ப்பதி வைத் துலகிற் பரவ-என்றும் பாடம் உளது.