பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 57 திருச் செங்கோட்டுக்கு உரிய நாமங்களாகத் திருப்புக ழில் செங்கோடு, செங்கோடை, செங்குவடு, நாகமா ம?ல, நாககிரி, காளக்கிரி, உரகசிகரி, சர்ப்ப கோத்ரம் சர்ப்ப கிரி, சர்ப்பப் பொற்றை, பணி சயிலம், புஜக கோத் திரி என்னும் பெயர்கள் போந்துள. இத்தலம் கொங்கு நாட்டைச் சார்ந்தது என்பது கொங்கின் புஜக கோத்திரி ( 1 181), கொங்கு நாட்டுத் திருச் செங்கோடு (373) என வருவதால் அறியக் கிடக்கின்றது. (29) திருவிடைக்கழி போலத் திருச் செங்கோடும் அருணகிரியார் விசேட அநுக் கிரகம் பெற்ற தலங்களுள் ஒன்ருகும் என்பது உரக கிரி யில்...வாழ்வித்த வேதியனும்...வேடிச்சி காவலனே' என வருந் திருவகுப்பால் அறிகின்ருேம். சுவாமிகள் ப்லநாள் திருச் செங்கோட்டில் தங்கி யிருந்தார். அப்பொழுது தெய் வத் திருமலைச் செங்கோட்டில் (23), சுழித்தோடும் ஆற்றில் (36), விழிக்குத் துணை (70), சேந்தனைக் கந்தன (72), மாலோன் மருகனை (90), கருமான் மருகனை (91), சேலிற் றிகழ் வயல் (97), செங்கேழடுத்த (104) எனத் தொடங்கும் கந்தரலங்காரச் செய்யுள்களைப் பாடி மகிழ்ந்தார். சுவாமிகள் ஆங்காங்குப் பல சமயங்களில் தனிப்பாடல்களாகப் பாடிய கட்டளைக் கலித் துறைச் செய்யுள்களில் ஒரு நூறு அவரா லேயோ பின்பு வேறு பெரியாராலோ தொகுக்கப்பட்டுக் கந்தரலங்காரம் என்னும் அருமைப் பெயரிடப்பட்டு, சலங் காணும் என்னும் நூற்பயன் கூறும் பாட்டுடன் ஒரு நூலாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகின் றது! நூறு பாடல்களுக்கு மேற்பட்ட காப்புச் செய்யுளும் ஆறு பாடல்களும் சுவாமிகள் வாக்காகவே காணப்படுகின் றன. இவ்விஷயத்தைப் பின் வருங் கந்த ரலங்கார ஆராய்ச் சியிற் காண்க. நாகாசல வேலவ நாலு கவித்தியாகா என வரும் கூகா எனத் தொடங்குங் கந்தரநுபூதிச் செய்யுளும் (11) இத்தலத்திற் பாடப்பட்டிருக்கலாம். இங்ங்னம் சுவாமிகள் திருச்செங்கோட்டில் இருக்கும் பொழுது வயலூரை என்று காண்பேன் என மனம்