பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"76 அருணகிரிநாகர் புக்கொளியூரைக் 'கலி புருஷனை வென்ற உண்மை அருட்சீர் விளங்கும் ஊர் என்னும் பொருளில் 'பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான புக்கொளி யூர்” (950)-எனப் போற்றினர். புக்கொளியூரில் திருவிழாக் கள் பல நடந்தன என்பதைக் காட்ட 'விழாமலி திருப்புக் கொளியூர்” (952) என்று கூறியுள்ளார். திருப்புக்கொளி யூரைத் தரிசித்தபின் (113) குருடி மலை[3951யை வணங்கி -அங்கு 'மதுரநதி'1 பெருகுவதைப் பாடலில் விளக்கினர். பின்பு (114) ஞானமலையைத் (391, 392) தரிசித்துத் தமது அடிநாட் சரிதத்தை ஒருவாறு விளக்கித் தாம் வாழ்க்கையை வெறுத்து உயிர் விடத் துணிந்த சமயத்தில் இறைவன் தம் முன் அணுகித் திருவடி தீகூைடி செய்த கருணையை, ‘அகமதை எடுத்த சேமம் இதுவோ என் றடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும் அணுகிமு னளித்த பாதம்”2 எனப் பாராட்டி, அத்திருவடியை மீண்டும் அருளுக என வேண்டினர். ஞானமலை, குருடிமலை யாய காடடர்ந்த ப்ரதேசங்களில் தனியாக யாத்திரை செய்யும் பொழுது ஒரு பெருங்காட்டில் வழிதப்பி அருணகிரியார் திகைத்துச் செங்கோடைக் குமரா வழி தெரியவில்லையே' என ஆண்டவனைத் தியா ளிைத்த பொழுது, செங்கோடைக் குமரன் என எங்கே நினைப் பினும் அங்கே என் முன்வந்து எதிர் நிற்பனே', 'கந்தா எனும்போ(து) செஞ்சேவல் கொண்டு வரவேணும்", 'பயந்த தனிவழிக்குத்துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமேஎன அவர் அருளிய திருவாக்கின் உண்மையை அவரே காணும்படி வேலாயுதம் அவருக்கு எப்புறத்தும் நின்று 1. 'மருத மெனு நதி' என்றும் பாடம். 2. இதற்கு நான் 'உயிர்விடும் போதும் முன்போல எதிர் ஆந்து திருவடியைத் தந்தருளுக்' எனவும் பொருள் கொள்ளக் கூடும்.