பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 77. இரவும் பகலும் துணை செய்ய, முருகவேளும் ஒரு வழி: காட்டியாய் வெளிப்பட்டு வந்து உதவினர். இதன் உண்மையைத் 'தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இருபுறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணைய தாகும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனதுளத்திலுறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே” னவரும் வேல் வகுப்பாலும், வெளிப்பட மகாடவியில் நிற்பதோர் சகாயக்காரனும் குறத்தி திருவேளைக் காரனே' எனவரும் வேளைக்காரன் வகுப்பாலும் அறியலாகும்" இங்ங்ணம் மெய் வருத்தம்பாராது கருமமே கண்ணுய் வேல். மயில் தியான்த்துடன் சுவாமிகள் மேலைச் சிதம்பரம் எனப் படும் (115) பேரூரை (953-954) அடைந்தனர். 11. பேரூர் முதல் பழகிவரை (8 தலங்கள் 115-122) பேரூரிற் பட்டி முநிவரை ஆட்கொண்டு அவருக்காக ச் சிவபிரான் கொட்டி நடனம் ஆடினதைப் 'பட்டியாள்பவர் கொட்டி யாடினர்' என்றும், காமதேனு பூசித்ததை 'ஆ. (பசு) சூழ் பேரூர்' என்றும் (954) புகழ்ந்து பாடினர். பிரம ம்ை திருமாலும் பட்டி முநிவர் கோமுநிவராகப் பேரூரில் தவஞ்செய்து சிவபிரானது நடனதரிசனத்தைக்கண்டு களித் தனரென்பதும், காமதேது. பூசித்த தலம் பேருர் என்பதும் பேரூர்ப் புராணத்தால் தெரிகின்றன. பேருருக்கும்-(172, திருவொற்றியூரைப் போல-ஆதிபுரி என்று ஒரு பெயர் இருத்தலாலும் நடராஜப் பெருமானைப் பற்றிக் கூறி இருத்த லாலும் கரிய முகில்' என்னும் 690-ஆம் பாடலும் பேரு ருக்கு உரியதாகக் கொள்ளலாம். பின்பு வட கொங்கு நாட்டைச் சார்ந்த (116), எழு கரை நாடு (990)1 என்னும் 1. குறவள்ளி பங்கன் எழுகரை நாடுயர்ந்த குமரன்” தனிப்பாடல்; கொங்குமண்டல சதகம் பக்கம் 53.