பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63/என் தந்தையார்


புக்கும்- இரசத்துக்குமாகச் சேர்த்து ஊற வைத்திருக்கிறேன்" என்று அவன் சொன்னான். உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. எப்போதும் குழம்புக்கும் ரசத்துக்கும் தனித்தனியாகப் புளி ஊறவைக்க வேண்டும். ஒன்றாக ஊறவைத்தால் முதல்பாதி மிகுதியாகப் புளிக்கும்; மறுபாதி துவர்க்கும். அதனால் குழம்பின் சுவையும் கெட்டுவிடும்; இரசத்தின் சுவையும் கெட்டுவிடும்.

இரண்டாவதுநாள் நான் சமைத்தேன். தானும் கற்றுக் கொள்வதாகச் சொல்லி அச்சமையல்காரன் என் அருகிலிருந்து அன்று கற்றுக் கொண்டான்.

என் தந்தையாரைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக, அயலுாரிலிருந்து எங்கள் வீட்டைத் தேடி யாராவது அடிக்கடி வந்து கொண்டிருப்பார்கள். முதன் முறை ஒழுங்காக நடந்து கொண்டவர்களாக இருந்தால் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக்கொள்வார். ஒழுங்காக நடந்து கொள்ளாதவர்கள் வீட்டைத் தேடி மறு முறை வந்துவிட்டால் அவர்கள்பாடு திண்டாட்டந்தான். “யாரவ"? கூப்பிடு!... போடா...! கூட்டமில்லை. போனமுறை வந்திருந்தப்ப பிட்நோட்டீஸ் போடல. சாப்பாடு சரியில்லை. ஒழுங்கா வண்டி ஏற்றிவிடல. போ! போ! வர முடியாது’’ என்று திட்டி அனுப்பிவிடுவார்.

கூட்டத்துக்குப் போகும் போது அவர் எந்த இடத்துக்குப் போகிறாரோ அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலைக் கேற்ப உடை, போர்வை, கம்பளிச் சட்டை ஆகியவற்றைப் பெட்டியில் வைத்து அனுப்புவோம். திரும்பி வரும் போது வெறும் பெட்டியும் அழுக்குத் துண்டும் தான் வரும். கேட்பவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டு வந்து விடுவார். ஒரு முறை வெளியூர் சென்றிருந்த போது வைரமோதிரத்தையும் கடிகாரத்தையும் கூட யாருக்கோ கொடுத்துவிட்டு வந்துவிட்டார். யாருக்கு அவர் எதைக் கொடுத்தாலும் வீட்டில் வாயைத் திறக்-