பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

boiler : கொதிகலன் :

(1) தொழிற்சாலைகள், கப்பல்கள், வீடுகள் முதலியவற்றுக்கான வெப்பத்தை அல்லது விசையை உண்டாக்கு வதற்காக நீராவியை உற்பததி செய்யும் ஒர் ஊதுலையின் பகுதி

(2) வீடுகளில் வெந்நீர் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கொள்கலம். திறந்தகலங்கள் அல்லது கொள்கலங்களிலிருந்து வேறுபட்டது

(3) பயன்பாடு, கட்டுமானம் ஆகியவற்றையொட்டி வெப்பு மூட்டு வதற்கும் திறனுாட்டுவதற்கு மான கொதிகலங்கள் நான்குவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

(1) வார்ப்பிரும்புப் பகுதிக் கொதி கலம்; (2) எஃகு நெருப்புக் குழாய் கொதிகலம்; (3) எஃகு நீர்க்குழாய் கொதிகலம், (4) சிறப்பு வகைக் கொதிகலம் (பார்க்க : வார்ப்பிரும்புக் கொதி கலம்; கிடைநிலை மீள் வரவுக் குழாய்க் கொதிகலன்; நெருப்புக் குழாய்க் கொதிகலம்; எஃகுக் கொதிகலம் முதலியன)

boiler horse power : (பொறி.) கொதிகலக் குதிரைத்திறன் : ஒரு கொதிகலத்தில், 212° பா. வெப்ப நிலையில் ஒரு மணிநேரத்தில் 15 கிலோ நீர் ஆவியாகும் திறன், ஒரு மணி நேரத்தில் 33, 471.9 B.T. W. அளவுக்குச் சமமானதாகும்

boiler plate : (பொறி.) கொதிகலத் தகடு : தொட்டிகள் அல்லது கொதிகலங்கள் செய்வதற்குப் பயன்படும் எஃகுப் பாளங்கள் அல்லது தகடுகள்

boiler room : (பொறி.) கொதிகல அறை : வெப்ப மூட்டுவதற்கும் விசையூட்டுவதற்கும் கொதிகலமும் அதன் துணைக் கருவிகளும் வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் அல்லது வேறு கட்டிடத்தின் ஒரு பகுதி

boiler scale : கொதிகலப் படலம் : ஒரு கொதிகலத்தினுள் உள்ள கார்பனேட்டு வண்டல், கால்சியம் மக்னீசியப் சல்பேட்டுகள், மற்ற மிதக்கும் பொருட்களின் படலம்

boiling point : கொதிநிலை : ஒரு திரவம் கொதித்து ஆவியாகக் கூடிய உச்ச வெப்ப நிலை. இது வாயுமண்டலக் காற்றின் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஒரு மலையின் உச்சியில் நீர், கடல் மட்டத்தை விடக் குறைந்த வெப்ப நிலையில் ஆவியாகிறது. ஒரு குறிப்பிட்ட வாயு மண்டலக் காற்றழுத்தத்தில் (பாரமானியில் பாதரசம் 76 செ.மீ. அளவு) ஒரு திரவம் ஆவியாவதைப் பொறுத்து அதன் கொதிநிலை நிருணயிக்கப்படுகிறது

bold : (அச்சு.) திண்மை அச்செழுத்து : கனத்த முகப்புடைய அச்செழுத்து. முனைப்பான தோற்றமுடைய எதுவும்

bold face : (அச்சு.) திண்மை முகப்பு : வாசக எழுத்துக்களை விடத் தடித்த தோற்றமுடைய அச்செழுத்து. தலைப்புகளை முனைப்பாகக் காட்டுவதற்கு இந்த வகை அச்செழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன

bole : செங்களிமண் : எளிதில் சுடத்தக்க செந்நிறக் களிமண் வகை. இது மஞ்சள், பழுப்பு, கருமை நிறங்களிலும் கிடைக்கிறது. முன்னர் சாயப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது

bolection : வார்ப்படப் புடைப்பு : சுவர், கதவு முதலியவற்றின் பரப்பிலுள்ள தனி முகப்புக் கூறுகளின் விளிம்பைச் கற்றியுள்ள ஒரு வார்ப்படம்

bollard : கட்டுத்தறி : கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற்