பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
103

board : பலகை அட்டை : மெல்லிய மரத்தகடு. இது மென் தகடுகள் அல்லது கட்டை வார்த்துணுக்குகளிலிருந்து வேறுபட்டது. மீ.க்குக் குறைவான கனமும், 10செ. அகலமும் கொண்ட நீண்ட துண்டுகள், பலகைகள் எனப்படுகின்றன

அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் கனத்த அட்டைப் பலகைகள்

board foot : பலகை அளவை : பலகை அளக்கும் மூல அளவு. 30 செ.மீ. சதுரமும், 2.5 செ.மி. அல்லது அதற்குக் குறைவான கனமும் கொண்ட அளவு

board measure : (மர. வே.) பலகை அளவீடு : கவட்டு மரங்களை வடிவுறுத்தி விலைகளை அறுதியிடப் பயன்படும் அளவீடு

board rule : (மர. வே.) பலகை அளவு கோல் : வெட்டுமரத் தரத்தைச் சோதனை செய்வதற்கான அளவுக் கூறுகள் குறிக்கப்பெற்ற அளவுகோல்

boasting : செதுக்குருவாக்கம் : திருத்தமின்றி வெட்டிச் செதுக்கி உருவாக்கம் செய்தல்

boat tail : (விண்.) படகு வால் : ஏவுகணையின் நீள் உருளைப் பகுதி, வாலை நோக்கி விட்டத்தில் குறுகிச் செல்லுதல். இதனால் வளி இயக்க இழுவை விசை குறைகிறது

bobbin : (குழை.) கம்பி இழையுருளை : ஒரு காந்தத்தின் கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கிற மைய உட்புரி

bodkin : (அச்சு.) அச்சு இடுக்கி : திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் ஒரு நீண்ட கூர்மையான இடுக்கி

bodoni : (அச்சு.) போடோனி அச்சுரு : போடோனி என்பவர் உருவாக்கிய முதலாவது நவீனப் பொதுமுறை அச்சுரு மாதிரி

body : (வானூ.)

(1) விமானக் கட்டுமானச் சட்டம் : எந்திரத்தின் மேல் மூடியும் கவசமும் கொண்ட விமானத்தின் கட்டுமானச் சட்டம்

(2) மட்கலம் : மெருகிடப்படாத அல்லது அலங்கார வேலை எதுவும் செய்யப்படாத வெறும் மட்கலம்

(3) தோரணி வார்ப்படம்

(4) திட்ப ஆற்றல் : பிளாஸ்டிக் தொழிலில், பிசைவுப் பொருளின் திட்ப ஆற்றலைக் குறிக்கும் சொல். இதைப் பொறுத்து அந்தப் பொருளை "மென் பொருள்" அல்லது 'திண்மப் பொருள்' என்பர்

bodying in : திண்மையாக்கம் வெட்டுமரத்தின் உள்ளணுத் துகளினை நிரப்பி மெருகேற்றுதல்

body matter : (அச்சு.) அச்செழுத்து வாசகம் : விளம்பரத்தில், காட்சியமைவு செய்யாமல் அடுக்கப்பட்ட அச்செழுத்து வாசகப் பகுதி

body type : (அச்சு.) வாசக அச்செழுத்து : நூல்கள் முதலியவற்றில் படிப்பதற்குரிய வாசகங்களுக்குப் பயன்படுத்தப்படும் அச்செழுத்து

bog ore : சதுப்புத் தாது : சதுப்பு நிலங்களில் காணப்படும் மென்மையான இரும்புத் தாது

boiled oil : (வண்.) கொதிநிலை எண்ணெய் : விதை எண்ணெய் 400° முதல் 500° பா. வரை கொதிக்க வைக்கப்பட்டு அதனுடன் காரீய அல்லது மாங்கனிஸ் டையாக்சைடு சிறிதளவு சேர்க்கப் படுகிறது. இந்த எண்ணெய் வண்ணங்களை விரைவாக உலரச் செய்வதற்குப் பயன்படுகிறது, பழம் பொருள்களுக்கு இது மிகச்சிறந்த மெருகு எண்ணெயாகும்