பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
115

brick facing : (க.க.) செங்கல் மறைப்பு : பார்க்க செங்கல் மேலொட்டுமானம்

brick pier : (க.க.) செங்கல் தாங்கு தூண் : ஆதாரமாகப் பயன் படக்கூடியதின் கட்டுமானம்

brick trowel : செங்கற் சட்டுவம் : சாந்துக் கலவையை எடுத்து சுவரில் பூசுவதற்குப் பயன்படக்கூடிய தட்டையான முக்கோண வடிவச் சட்டுவக்கரண்டி. இது சாந்துச் சட்டுவத்தைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும்

brick veneer : (க.க.) செங்கல் மேலொட்டுமானம் : ஒரு சட்டகத்தை அல்லது வேறு கட்டமைப்பினை மறைப்பதற்கான பகட்டு மேலாடை மென் பூச்சுமானம்

bridge circuit : (மின்.) இணைப்பு மின்சுற்றுவழி : ஒரு பொதுவான இணைப்பின் மூலம் இணைக்கப் பட்டுள்ள உறுப்புகளின் இணையான தொகுதி வரிசையினைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழி. அளவிடு கருவிகளில் இந்த இணைப்பு பெரும்பாலும் அளவு மானியாக இருக்கும்

bridge rectifier : (மின்.) இணைப்பு மின்மாற்றி : ஒர் இணைப்புத் தொகுதியில் நான்கு மின்மாற்றிகளைப் பயன்படுத்துகிற ஒரு முழு அலை மின்மாற்றி

bridge or structural engineer : பாலம் அல்லது கட்டுமானப் பொறியாளர் : பாலங்களையும், பெரிய கட்டிடங்களின் எஃகுப் பணிமாணங்களையும் வடிவமைப்பதிலும், கட்டுமானம் செய்வதிலும், நிறுவுவதிலும் முக்கியமாக ஈடுபடுகிற பொறியாளர்

bridging : (க.க.) குறுகலான பட்டைகளை அல்லது சட்டங்களைப் பயன்படுத்தித் துலாக் கட்டைகளுக்கு அல்லது குமிழ் முகப்புகளுக்கு வலிவூட்டும் ஒருமுறை

bridging : (மின்.) இணை மின் இணைப்பு : ஒரு மின்சுற்று வழியை இன்னொரு மின்சுற்று வழியுடன் இணையாக இணைத்தல்

bright annealing : (உலோ.) ஒளிர்வுப் பதனாக்கம் : கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூல மாகவோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் முலமாகவோ கடுமையாகப் பதப்ப்டுத்துதல். இதன் மூலம் ஆக்சிகரணமாவதும், வணண்ம் மங்குவதும் தடுக்கப்படுகிறது

bright dipping : (உலோ.) ஒளிர்வுத் தோய்வு : உலோகத்திற்கு ஒளிர்வர்ன மெருதினைக் கொடுப்பதற்காக அந்த உலோகத்தை ஒரு வேதியியல் கரைசலில் தோய்த் தெடுத்தல்

Bright's disease : (நோயி.) பிரைட் நோய் : சிறுநீரகத்தில் ஏற்படும் வீக்கநோய்

brightness : ஒளிர்வுத் திறன் : அலைபரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலின் ஒளிர்வுத் திறனளவு

brightness control : ஒளிர்வுக் கட்டுப்பாட்டு அமைவு : அலை பரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலில் படத்தின் மொத்த ஒளிர்வினைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் அமைவு

brilliance : (மின்.) ஒளிர்வுத் திறன் : தொலைக்காட்சியில் உருவாகும் படம் தெளிவாகவும், ஒளிர்வுடனும் இருக்கும் அளவு

brine : (குளி.) உவர்நீர் : குளிர் பதனத்தில் வெப்பத்தை நிலை மாறுபாடு இல்லாமல் செலுத்