பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
132


உந்துவண்டிகளில்அடிப்புறத்தில் முன் சக்கரங்களை நெருக்கமாகக் கொணர்ந்து உந்துவண்டியை எளிதாகச் செலுத்துவதற்கு உதவும் அமைப்பு

cambium layer : கேம்யம் அடுக்கு : மரங்களில் மரத்திற்கும், பட்டைக்கு மிடையிலான உயிரனு மண்டலம். இந்த அடுக்கிலிருந்து வளர்ச்சி ஏற்படுகிறது. எலுமிச்சை மர இனத்தில் இதனைக் காணலாம்

Cambric : அலங்காரத் துணி : நயமான வெண்ணிற இழைத் துணி வகை அறைகலன்களின் அலங்காரத்துணியாகப் பயன்படுகிறது. வெண்துணி மெத்தைத் திண்டுகளுக்கு உறையாகவும், கறுப்புத் துணி திண்டுகளுள்ள அறைகலன் உட்புற ஒட்டிணைப்பாகவும் பயன்படுகிறது

cam drive : முனைப்பியக்கம் : முனைப்புச் சக்கரங்கள் மூலமாகப் பெறப்படும் ஒருவகை இயக்கம். இதில் ஒரு வகை இயக்கத்தை, உந்துவண்டியில் உள்ள சுழல் தன்டில் உள்ளது போன்று, துல்லிய மான நேரத்தில் அல்லது வேறொரு இயக்கத்துடன் தொடர்புடையதாக நிகழுமாறு செய்யலாம்

cam engine : முனைப்பு எஞ்சின் : ஒரு முனைப்பு மற்றும் சுழல் இயக்கம் மூலமாக உந்து தண்டுகள் மாறிமாறி எதிரெதிர் இயங்கக் கூடிய ஒரு வகை எஞ்சின்

cameo : புடைசெதுக்கு மணி : உள் வண்ணம் வேற்றுப் பின்னணி வண்ணமாக அமையுமாறு புடைப் புருவாகச் செதுக்கப்பட்ட மணி. பதினெட்டாம் நூற்றாண்டுப் பாணியிலமைந்த நாற்காலிகளில் இதனைக் காணலாம்

camera boom : ஒளிப்பட இயக்கி : ஒளிப்படக் கருவிக்கு இயக்கத் திறனை அளிக்கும் ஒரு சாதனம். இதன்மூலம் ஒளிப்படக்கருவியைக் கீழே இறக்கலாம்; மேலே உயர்த்தலாம்; இடப்பக்கம், வலப்பக்கம் நகர்த்தலாம். ஒரு சக்கர அடித்தளத்தின் மீது இதனை இயக்கலாம். இதனை பளுதூக்கி என்றும் கூறுவர்

camara tube : ஒளிப்படக் குழல் : தொலைக்காட்சி ஒளிப்படக் கருவிகளில் ஒளியும் நிழலுமான ஒரு காட்சின்ய மின்னியல் தூண்டு விசைகளாக மாற்றுவதற்குப் பயன்படும் மின்னணுவியல் குழல்

campenile : மணிக்கூண்டு : தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு

camphor : கற்பூரம்/சூடம் : ஒளியுருவான, விரைந்து ஆவியாகக்கூடிய வெண்ணிறப் பிசின், வெடி பொருள்கள், செல்லுலாய்டு, தொற்றுத் தடைமருந்துகள் தயாரிக்கப்படுகிறது

camshaft : (தானி.எந்.) முனைப்புச் சுழல் தண்டு : வரிசையான முனைப்புச் சக்கரங்கள் கொண்ட ஒரு சுழல் தண்டு. இதிலுள்ள முனைப்புச் சக்கரங்கள் உந்துவண்டி எஞ்சின் ஒரதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இடைவெளிகளில் அமைந்திருக்கும்

கழல் தண்டு

cam vise : (எந்). முனைப்புக்குறடு : இயக்கத்தின் சக்கரத்தின் சுற்று வட்டம் கடந்த முனைப்பு இயக்கத்தின் மூலம் திறக்கவும் மூடவும் கூடிய ஒருவகைப் பற்றுக் குறடு

can : (விண்.) ஏவுகணைக்கலம் : ஏவுகணையை வைப்பதற்குரிய ஒரு காப்பு அல்லது கலம். இதன்