பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
137

மணமற்ற, சுவையற்ற ஒரு வாயு கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தது. கார்பன் எரிபொருள்களின் முழுமையற்ற உள்ளெரிவால் இந்த வாயு உண்டாகிறது

carbon paper : படிவுத் தாள் : மெழுகையும் கார்பனையும் சேர்த்து கலவை பூசப்பட்ட, படியெடுக்க உதவும் மெல்லிய தாள்

carbon piles : (மின்.) கார்பன் மின் நிரைகள் : மின்னோட்டம் விளைவிப்பதற்கான வகை மாறி அடுக்கி வைக்கப்படும் கார்பனாலான தகடுகளின் நிரை. இவை மிக அதிக மின்னிறக்கச்சோதனை தொகுதியில் தடை அலகுகளாகப் பயன்படுகிறது

Carbon remover : (தானி.) கார்பன் அகற்றி : கையினால் பயன் படுத்துவதற்கு அல்லது பொறியமைவில் பயன்படுத்துவதற்குப் பயன்படும் உரசித் தேய்த்து அகற்றும் ஒரு கருவி; கார்பன் படிவுகளை அகற்றுவதற்கு பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தப்படும் ஒரு திரவம்

Carbon "rheostat : (மின்.) கார்பன் தடைமாற்றி : தடையாகச் செயற்படும் கார்பன் தகடுகளைப் பயன்படுத்தும் ஒரு தடைமாற்றி

Carbon steel : கார்பன் எஃகு : அதிவேக எஃகு அல்லது உலோகக் கலவை. எஃகு அல்லாத பிற கருவி எஃகுகளைக் குறிக்கும் சொல். 50 புள்ளி கார்பனுக்குக் கீழ்ப் பட்ட இது கடினப்படவில்லை என்றால், அது குறைந்த கார்பன் எஃகு என்று அழைக்கப்படும். 75 புள்ளி கார்பனால் கடினமாக்க முடியும். எனினும், சிறந்த கார்பன் எஃகில் சுமார் 100 புள்ளி கார்பன் அடங்கியிருக்கும்

Carbon tetrachloride : (வேதி.) கார்பன் டெட்ராகுளோரைடு : இது எளிதில் தீப்பற்றாத ஒரு திரவம். துப்புரவு செய்யும் பணிகளில் எண்ணெய், பிசுக்கு போன்றவற்றைக் கரைப்பதற்கு ஒரு கரைப்பானா கப் பயன்படுத்தப்படுகிறது. பல வகைத்தீயணைப்புக் கருவிகளிலும் தீயணைப்புப் பொருளாகவும் பயன்படுகிறது

Carborundum : தோசைக் கல் : சிலிக்கன் கார்பைடு போன்ற உராய்வுப் பொருள்களைக் குறிக்குல் ஒரு வாணிகப் பொருள்

Carboy : (வேதி.) கண்ணாடிப் புட்டி : மூங்கிற்கூடை அன்னப்புடைய பெரிய உருண்டைக் கண்ணாடிப் புட்டி. இது அமிலங்களின் கொள்கலமாகப் பயன்படுகிறது. இதனை ஒரு மரப்பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்

Carburetor : (தானி; எந்.) ஏரிவளி கலப்பி : உள் வெப்பாலையில் எரி பொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவு

எரி வளி கலப்பி

carburetor barrel : (தானி; எந்.) எரி-வளி கலப்பி உருளை : எரி-வளி கலப்பியில் உறிஞ்சும் காற்றறையைச் சுற்றியிருக்கும் உலோகப் பகுதி. அடைப்பானிலிருந்து விளிம்புப் பட்டைக்குச் செல்லும்பாதை முழுவதற்கும் ஒரு சுவராக அல்லது உருளையாக அமைந்திருக்கும்

Carburetor bowl : (தானி; எந்) எரி-வளி கலப்பிக்கலம் : எரி-வளி கலப்பியில் திரவ பெட்ரோலை அல்லது எரிபொருளைத் தேக்கி வைத்திருக்கும் கொள்சலப்பகுதி