பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
159

மாகப் பயன்படுகிறது. பெரும்பாலான நேர்வுகளில், குரோம வனேடியம் எஃகு அல்லது நிக்கல். எஃகு குறைந்த செலவில் இதே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது

chrome tannage : குருமத்தோல் பதனீடு : குரோமிக்படும் குரும உப்புகளின் உதவியால் தோல் பதனிடு செய்வதற்கான ஒரு முறை

chrome vanadium steel : குரோம் வனேடியம் எஃகு : இது ஒரு வகை வலுவான எஃகு, இதில் 0.87% குரோமியம் 0.18% வனேடியம் கலந்திருக்கும். வெப்பமூட்டிப்பதப்படுத்திய பிறகு, இதன் வலிமையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 9080 இலோ என்ற அளவில் இருக்கும் வரம்பில் இந்த அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு 86941 கிலோ என்ற அளவில் இருக்கும்

chrominance : (மின்.) நிறக்வைத் திறன் : வண்ணத்தின் பூரித மற்றும் நிறக்கலவைத் திறன்

chromium : (உலோ.) குரோமியம் குருமம் : (Cr) இது அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங் களையுடைய ஒர் உலோக வகை. இது பழுப்பு வெள்ளை நிறத்திலுள்ள ஒரு தனிமம். இதன் வீத எடைமானம் 6.50; உருகுநிலை 2939°ஃபா. எஃகு உலோகக்கலவைகளிலும் முலாமிடுவதிலும் பயன்படுகிறது

chromium oxide : குரோமியம் ஆக்சைடு : பச்சை நிறமுள்ள வண்ண மூட்டும் ஒரு காரகி

chromium plated tools : (உலோ.) குரோமியம் முலாமிட்ட கருவிகள் : கருவிகளிலும் கணிப்புக் கருவிகளிலும் குரோமியம் முலாமிடுவதன் மூலம் பளபளப்பாக இருக்கும்படி செய்யப்படுகிறது

chromium plating tools : குரோமியம் முலாமிடுதல் : சாதகமில்லாத பருவ நிலைகளுக்கு உட்படும் உந்து வண்டிகளின் உறுப்புகள் சேதமடைந்துவிடாமல் தடுத்து. பளபளப்பாக இருக்கும்படி செய்வதற்காகக் குரோமியம் முலாமிடுதல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நிக்கல் முகாமிடுதலுக்குப் பதிலாகக் கையாளப்படுகிறது

chromium steel : (உலோ.) குரோமியம் எஃகு : 1%-2% வரை குரோமியம் அடங்கியுள்ள எஃகு. இது மிகக் கடினமானது, வலுவானது. இது உந்து வண்டி உறுப்புகள் தயாரிப்பதற்கான உலோகக் கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏவுகணைகள் தயாரிக்கவும் கவச தகடுகளாகவும் பயன்படுகிறது

chromodizing : (உலோ.) குரோமியப் படலமேற்றுதல் : அலுமினிய உலோகக் கலவைகளில் கடினமான மேற்படலம் ஏற்படும்படி செய்வதற்கான ஒரு வெப்ப அமிழ்வுச் செயல் முறை

chronometer : நுண் காலக் கணிப்பான் : நுட்பமாகவும் துல்லியமாகவும் காலத்தைக் கணிக்கக் கூடிய ஒரு கருவி

chrysotile : இழைம மணிக்கல் : பாம்புத் தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை

chuck : (பட்.) சுழல்வார் : பணிக் குரிய பொருள்களை ஏந்தி வாகாகச் சுற்ற வல்ல எந்திரப்பணி ஏந்தமைவுத் தோல்வார். இது பல் வேறு நோக்கங்களுக்காகவே பல்வேறு வகைகளில் உள்ளது

chucking : (எர்.) சுழல்வார் பணியாக்கம் : கடைசல் எந்திரத்தில் சுழல் வாரில் பணிக்குரிய பொருள்